“மீன் மார்க்கெட் போகறவங்க இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணி மீன் வாங்குங்க..!

மீன் மார்க்கெட் களுக்கு சென்று அங்கு மீனை வாங்கி வந்து சமைக்க கூடியவர்கள், மீனைப் பார்த்ததுமே அது பழைய மீனா அல்லது புதிய மீனா என்பதை சுலபமாக கண்டுபிடித்து புதிய மீனை வாங்கி சென்று ஆரோக்கியமாக சமையலை செய்யலாம்.

அப்படி அது புதிய மீன்னா அல்லது  பிடித்து வைத்து பல நாட்கள் ஆன மீன்னு என்பதை கண்டுபிடிக்க எளிய சில டிப்ஸை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

good fish buying

அதற்கு நீங்கள் மீனை எடுத்து அதன் கண்களை பார்க்க வேண்டும். மீன்களின் கண்கள் சற்று பிரகாசமாக இருந்தால் அது புதிய மீன். அப்படி இல்லாமல் அந்த மீனின்  கண்ணில் வெள்ளை நிற அடுக்கு ஒன்று இருக்கும் இப்படி இருந்தால் இது பிடித்து வந்து பல நாள் ஆன மீன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிதாக பிடிக்கப்பட்ட மீனின் செவில்கள் பிரகாசமாகவும், சிவப்பு நிறமாகவும் இருக்கும். இதை பார்த்தாலே அது இன்று பிடிக்க பட்ட மீன் என்பது உங்களுக்கு எளிதில் புரிந்துவிடும். இதுவே பழைய மீனாக இருந்தால் அதன் செவில்கள் வெளிரி போய் இருக்கும்.

good fish buying

மேலும் நீங்களே வாங்கும் போது அதன் செதில்களை தவறாமல் பார்த்து வாங்க வேண்டும். மீனின் தோளோடு செதில் இணைந்திருக்கும் மீனை மட்டுமே தேர்வு செய்து வாருங்கள்.

புதிதாக பிடிக்கப்பட்ட மீனின் தோலானது மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும் ஆனால் பழைய மீனின் தோல் வறண்டு போயிருக்கும். இதை பார்க்கும் நீங்கள் புதிய மீன்னா அல்லது பழைய மீன்னா என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

good fish buying

புதிதாக பிடிக்கப்பட்ட மீனினுடைய வால் பகுதி சற்று பரந்து அகலாமாக காணப்படும். அதுவே பழைய மீன் எனில் வால் பகுதி சுருங்கிய நிலையில் இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் மீனின் வயிற்றுப் பகுதியை நீங்கள் அழுத்தும் போது அது வீங்கி இருப்பது போல் உணர்ந்தீர்கள் என்றால் எந்த மீனை பிடித்து பல நாட்கள் ஆகிவிட்டது என்பதை புரிந்து கொண்டு அந்த மீனை தவிர்த்து விடுங்கள்.

எனவே மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி இனி மீன் வாங்கும் போது இந்த குறிப்புக்களை நீங்கள் சரியான முறையில் ஃபாலோ செய்வதின் மூலம் புதிய மீன்களை உங்கள் வீட்டுக்கு வாங்கி வந்து எளிதில் சமைத்து சுவைக்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …