“வருமுன் காப்பது சிறந்தது..!” – சர்க்கரை நோய் ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்..!

இன்று இளம் வயதில் இருக்கும் நபர்கள் முதல் வயதானவர்கள் வரை வீட்டில் குறைந்த பட்ச நபர்கள் நாலு பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்களில் இருவருக்கோ, ஒருவருக்கோ கட்டாயம் சர்க்கரை நோய் இருப்பது இயல்பாகி விட்டது.

sugar

சர்க்கரை நோய் வந்து விட்டால் அதன் பின் எண்ணற்ற நோய்களுக்கு நமது உடல் கூடாரம் ஆகிவிடும். எனவே  சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும். அதன் மூலம் நாம் சர்க்கரை நோய் ஏற்படாமல் எப்படி நம்மை பாதுகாக்கலாம் என்பது பற்றிய சில முக்கிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க சில டிப்ஸ்

உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் ஆவது நீங்கள் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தசை மற்றும் உடல் செயல்பாடுகள் அதிகரித்து இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சக்கூடிய திறன் மேம்படும்.

sugar

ஆரோக்கியமான உணவு முறையை நீங்கள் பின்பற்றுவது அவசியமானது. பழங்கள், காய்கறிகள், நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் சாப்பிடுவது நல்லது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிவப்பு இறைச்சி, சர்க்கரை போன்றவற்றை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

மேலும் அதிகப்படியாக கொழுப்பு சேர்வது உங்கள் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கு வழி செய்யும். எனவே உடலில் கொழுப்பு சத்து சேர்வதை தடுக்க வேண்டும். அவ்வாறு கொழுப்பு சத்து சேர்வதின் மூலம் உங்கள் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையை எப்போதும் நீங்கள் பராமரிக்க தவற வேண்டாம்.

sugar

சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான எடையுடன் இருந்தால் உங்களது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் எளிதில் உங்களை உயர் ரத்த அழுத்தம் தாக்கும். எனவே விளைவுகள் படுமோசமாக இருப்பதை உணர்ந்து நீங்கள் செயல்படவும்.

உங்களுக்கு வயது அதிகரிக்கும் போது ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை தவறாமல் பரிசோதனை பண்ணிக் கொள்வதின் மூலம் உடல் நல சிக்கல்களில் இருந்து நீங்கள் விடுதலை பெற முடியும்.

sugar

எனவே மேற்கூறிய குறிப்புகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொண்டு வருமுன் காப்பது சிறந்தது என்பதை புரிந்து கொண்டு சர்க்கரை நோய் ஏற்படாமல் உங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …