இன்று நடுத்தர குடும்பங்கள் முதல் பெரிய குடும்பங்கள் வரை ஃப்ரிட்ஜ் என்பது வீட்டில் இருக்கும் அத்யாவசிய பொருள்களின் லிஸ்டில் வந்துவிட்டது. அப்படிப்பட்ட அந்த பிரிட்ஜை எளிதாக பராமரிப்பது மூலம் நீண்ட ஆயுளை பெறுவதோடு மட்டுமல்லாமல் சிக்கனமாக மின்சாரத்தை சேமிக்கலாம்.
ஃப்ரிட்ஜை பராமரிக்கக் உதவும் குறிப்புகள்
😊நம் வீட்டில் இருக்கக்கூடிய பிரிட்ஜை அடிக்கடி நாம் சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் அந்த பிரிட்ஜின் உள் பிசுபிசு என்று இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஒரு துரு வாடை ஃப்ரிட்ஜினுள் வீசும்.
😊இதனை சரி செய்ய நீங்கள் வாரத்தில் ஒருமுறையாவது உங்கள் பிரிட்ஜை சுத்தம் செய்வது அவசியம். அவ்வாறு செய்யும் போது அந்த பிசுபிசுப்பு தன்மையோ அல்லது கெட்ட வாடையோ ஏற்படாது.
😊 மேலும் நீங்கள் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும்போது ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் எல்லா பொருட்களையும் எடுத்து வெளியே வைத்துவிட்டு சுத்தம் செய்யும் போது தான் அனைத்துப் பகுதிகளும் சுத்தமாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
😊 மேலும் நீங்கள் சுத்தப்படுத்தும்போது இளம் சூடி இருக்கும் சுடுநீரை பயன்படுத்தி உள்பகுதிகளை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. அழுக்கு அதிகமாக படிந்து இருக்கும் பகுதியில் சற்று அழுத்தம் கொடுத்து நீங்கள் துடைத்தால் அந்த அழுக்கு அப்படியே நீங்கிவிடும்.
😊 மேலும் பிரிட்ஜை துடைப்பதற்கு உரிய ஏதேனும் வேதிப்பொருட்கள் இருந்தால் லேசாக அந்த பொருட்களை தெளித்துவிட்டு பிறகு சுத்தம் செய்வதன் மூலம் பிரிட்ஜ் பளபளப்பாக மாறும். அது போல எந்தவிதமான லிக்விட் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.
😊ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் டிஜிட்டல் இவை இரண்டையும் கலந்து ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கரைசலாக மாற்றி துடைக்கலாம். இந்த கரைசலை பிரிட்ஜின் உள்பகுதியிலும் வெளிப்பகுதிகளும் தெளித்து நீங்கள் துடைக்கும் போது அழுக்குகள் நீங்கி சுத்தமாகும்.
😊 குறிப்பாக பிரிட்ஜின் கதவு பகுதிகளில் அழுக்கு அதிகமாக இருக்கும் இந்த அழுக்கை போக்க வெள்ளை வினிகரை நீங்கள் பயன்படுத்தலாம்.இதன் மூலம் பிரிட்ஜில் ஒட்டி இருக்கக்கூடிய தூசு அழுக்கு அனைத்தும் நீங்கும்.
😊 துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக சிறிதளவு புதினா இலைகளை அப்படியே வைத்துவிட்டால் பிரிட்ஜ் புதினா வாசத்தோடு கமகமவென இருக்கும். துர்நாற்றம் ஏற்படாது.
😊 மேலும் கறிவேப்பிலை கொத்தமல்லி போன்றவற்றை தனித்தனியாக டப்பாக்களில் அடைத்து சீராக வைப்பதின் மூலம் ஃப்ரிட்ஜில் அதிக இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது .
😊அது போலவே காய்கறிகளையும் ஒரு துணி பையில் சுற்றி வைப்பதால் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிக அளவு அழுக்கு படியாமல் இருக்கும். இந்தக் குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்து உங்கள் பிரிட்ஜில் பயன்படுத்திப் பாருங்கள் நிச்சயமாக நல்ல பலன் கிட்டும்.