“வெயில் காலம் என்றாலே வியர்வை நாற்றம் தான்..!” – வியர்வை நாற்றத்தில் இருந்து தப்பிக்க சூப்பரான குறிப்புகள்..!!

வெயில் காலம் வந்து விட்டாலே நாம் எத்தனை முறை குளித்தாலும் உடலில் ஏற்படும் வியர்வையின் காரணமாக ஒரு வித வியர்வை நாற்றம்  நம் உடம்பில் ஏற்படும்.

 துர்நாற்றம் போக வேண்டும் என்பதற்காக அதிகளவு பெர்பியூம் பயன்படுத்துவோம். எனினும் அந்த டியோடெண்டுகளை தாண்டக்கூடிய அளவு நாற்றமானது  நிலைத்து இருந்தால் நீங்கள் கட்டாயம் இந்த குறிப்புகளை ஃபாலோ செய்வதன் மூலம் வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுதலை ஆகலாம்.

 வியர்வை துர்நாற்றம் போக

 குறிப்பு 1

 நீங்கள் தினசரி குளிக்கும்போது குளிக்கும் நீரில் எலுமிச்சை பல சாறினை ஊற்றி அதோடு ஒரு கால் டீஸ்பூன் அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். எந்த நீரில் நீங்கள் தொடர்ந்து குளித்து வரும்போது அக்குள் பகுதிகளில் கூடுதலாக நீரை விட்டு நன்கு தெளித்து குளியுங்கள். அவ்வாறு செய்வதின் மூலம் உங்களுக்கு வியர்வை துர்நாற்றம் ஏற்படாது.

குறிப்பு 2

 நீங்கள் குளிக்கும் நீரில் டெட்டாலை சில சொட்டு போட்டு குளித்து வருவதன் மூலம் வியர்வை துர்நாற்றம் ஏற்படாது. அதுபோல படிகாரக் கல்லை கொண்டு நீங்கள் தேய்த்து குளித்தாலும் இந்த துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.

குறிப்பு 3

 நீங்கள் குளித்து முடித்த பின்பு வாசனை பவுடர்களை உங்கள் உடல்களில் பூசி கொள்ளலாம். அவ்வாறு பூசுவதின் மூலம் வியர்வை துர்நாற்றத்தை தடுக்க முடியும்.

குறிப்பு 4

 இரவு உறங்குவதற்கு முன்பு உங்கள் அக்குள்களில் சந்தன கட்டையை நன்கு உரைத்து அந்த சந்தனத்தை குழைத்து நீங்கள் தடவி விடுங்கள். தரமான ஒரிஜினல் சந்தனமாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த சந்தனத்தோடு நீங்கள் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து பூசி வருவதன் மூலம் வியர்வையால் ஏற்படக்கூடிய துர்நாற்றம் நீந்தி விடும்.

குறிப்பு 5

 புதினா இலையில் இருந்து சாறினை எடுத்து அந்தச் சாறினை உங்கள் நீரில் கலந்து குளிக்கும் போது உங்கள் உடலில் வாசம் ஏற்படும். துர்நாற்றம் நீங்கும். மேலும் இந்தச் சாறினை உங்கள் அக்குள் பகுதிகளில் நேரடியாக தடவிக் கொள்ளலாம்.

எங்கெல்லாம் வியர்வை சுரப்பிகளின் மூலம் அதிக அளவு வியர்வை ஏற்படுகிறதோ அந்த பகுதிகளில் இதை அதிக அளவு தடவ விட்டு பின்பு நீரில் குளிக்கும் போது துர்நாற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலையை இது குறைத்து விடும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …