“வெள்ளிக்கிழமை-களில் இத செஞ்சா..!” அஷ்ட ஐஸ்வர்யங்கள் இல்லத்தில் தாண்டவம் ஆடும்..!

இந்துத்துவத்தின் படி வெள்ளிக்கிழமை என்பது மிக முக்கியமான நாளாக கூறப்பட்டுள்ளது. எந்த நாட்களில் மேற்கொள்ளப்படக்கூடிய சில விஷயங்களால் வீடுகளில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிரம்பி வழியும் என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது.

 அந்த வரிசையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் நீங்கள் உங்கள் வாசலில் கோலம் போடும் போது தாமரைப் பூவை கோலமாக போடுவதால் மகாலட்சுமி எளிதில் உங்கள் வீட்டில் வாசம் செய்வாள் என்று கூறி இருக்கிறார்கள்.

 லட்சுமி கடாட்சத்தை விரும்பக்கூடிய அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று தாமரை பூ கோலம் போடுவதை தவிர்க்க வேண்டாம்.

 அதுபோலவே வெள்ளிக்கிழமை அன்று சமையல் அறையில் இருக்கும் ஸ்டவ்வை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் இல்லை என்றால் வியாழக்கிழமை இரவே சுத்தம் செய்துவிட்டு எச்சில் பாத்திரங்களை வைக்காமல் ஓரம் கட்டி விடுங்கள் அல்லது தேய்த்து எடுத்து வைத்து விடுங்கள்.

 இவ்வாறு சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொள்வதின் மூலம் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும். மேலும் வீட்டை கூட்டக்கூடிய துடைப்பம் மற்றும் கிடைக்கக்கூடிய மோப் இவற்றை கதவு ஓரங்கள் ஜன்னல் ஓரங்கள், மூலை இடுக்குகளில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.

 அதுபோல் வீட்டில் இருக்கும் ஒட்டடையை வெள்ளிக்கிழமை அன்று சுத்தம் செய்வதை  விடுத்து விட்டு மற்ற நாட்களில் சுத்தம் செய்வது உதிதமான ஒன்றாகும். ஒட்டடை அடிக்கும் வேலையை பெண்கள் செய்வதை விட ஆண்களிடம் செய்ய ஒப்படைத்து விடுவது தான் உத்தமம் என்று கூறி இருக்கிறார்கள்.

 மேலும் மாலை நாலு முப்பது மணிக்கு முன்பாக உங்கள் வீட்டை கூட்டிவிட்டு ஐந்தரை மணிக்குள் விளக்கினை ஏற்றுவது உத்தமம். கண்டிப்பாக வெள்ளிக்கிழமைகளில் துவரம் பருப்பை சமைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அப்படி சமைக்க முடிக்க முடியவில்லை என்றால் நான்கு பருப்பை சாகத்தோடு போட்டு  சமைத்து விடுங்கள்.

 அழுக்குத் துணிகளை கும்பலாக சேமித்து வைத்திருக்காமல் ஒரு பகுதியில் எடுத்து போட்டு வைத்து விடுங்கள் இல்லை என்றால் வியாழக்கிழமை முடிந்தவரை துவைத்து விடுங்கள் வெள்ளிக்கிழமை அழுக்கு துணிகளை துவைப்பது அவ்வளவு சிறப்பானது அல்ல. அவ்வாறு வெள்ளிக்கிழமை துவைப்பதின் மூலம் வீட்டில் தரித்திரம் அதிகரிக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam