“கோடையில் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட..!” – இதை செய்தால் போதும்..!

கோடை காலத்தில் அதிக அளவு தலைகளில் ஏற்படக்கூடிய வியர்வையின் மூலம் பொடுகு தொல்லை அதிகரிப்பதோடு அதிக அளவு சொரிச்சல் ஏற்படும். மேலும் அதிகப்படியான அழுக்கு, தூசுக்கள் உங்கள்  தலையில் படிந்து இந்த பூஞ்சை தொற்றை ஏற்படுத்துவதின் மூலம் முடி உதிர்தல் அதிகளவு அதிகரிக்கும்.

எனவே கோடை காலத்தில் உங்கள் தலைமுடி பராமரிப்பில் கூடுதல் கவனத்தை நீங்கள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் கடுமையான முடி உதிர்வை சந்திக்க வேண்டி இருக்கும்.

அப்படி அதிக அளவு பொடுகு தொல்லை முடி உதிர்தல் தலைமுடியில் வளர்ச்சி ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடை காலத்தில் உங்கள் தலைமுடியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வாரத்தில்  மூன்று முறையாவது நீங்கள் தலைக்கு குளிப்பது அவசியமானது. இதன் மூலம் அதிக வியர்வையால் உங்கள் உச்சந்தலையில் அழுக்கு சேராமல் பொடுகு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இது வழி செய்யும்.

மேலும் அதிகளவு ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் ஷாம்புக்களை பயன்படுத்துவதை நீங்கள் தவிர்த்து விடுங்கள். இதனால் உங்கள் தலைமுடி விரைவாக வறண்டு போகும். அதுமட்டுமல்லாமல் தலைமுடிவில் முடியில் பிளவுகள் ஏற்பட்டு எளிதில் முடி உதிரும்.

கோடைகாலத்தை பொறுத்தவரை நீங்கள் லேசான அல்லது இயற்கையான ஷாம்புக்களை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

கோடை காலத்தில் வாரத்திற்கு ஒருமுறையாவது உங்கள் தலையில் நன்கு நல்லெண்ணெயை தேய்த்து தலைக்கு குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உடல் சூடு குறைவதோடு தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியையும் தூண்டிவிடும்.

கோடையில் அதிக அளவு தண்ணீரை குடிப்பதன் மூலம் உங்கள் உடல் மட்டுமல்லாமல் சருமம், தலைமுடி போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்த அளவு எட்டு டம்ளர் தண்ணீரை நீங்கள் குடிக்க வேண்டும்.

மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் கோடையில் ஏற்படுகின்ற முடி பிரச்சனைகளிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும். மேலும் அந்த குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி அதனால் பெற்ற அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …