“வெற்றி மேல் வெற்றி பெற புதன்கிழமை விநாயகர் வழிபாடு..! – உங்கள அடிச்சுக்க முடியாது..!

நாம் செய்யும் காரியங்கள் விக்னமில்லாமல் முடிவதற்காக விக்னேஸ்வரனை நாம் வழிபடுகிறோம். இந்தப் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. மேலும் நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால் புதன்கிழமை அன்று எந்த விநாயகரை வழிபடுவதின் மூலம் எண்ணற்ற வெற்றி உங்களை வந்து அடையும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் புராணத்தில் கூறப்பட்ட கதைகளில் விநாயகப் பெருமான் தன் தாயார் பார்வதிக்கு பிறக்கும்போது புதபகவானும், கைலாயம் மலையில் இருந்தாராம்.

 எனவே தான் புதன்கிழமை அன்று விநாயகரை வழிபட வேண்டும்.அதன் மூலம் உங்களுக்கு புதன் தோஷம் இருந்தாலும் அதை நீக்கக்கூடிய ஆற்றல் அவருக்கு உள்ளது.

அதுமட்டுமல்ல வாரத்தின் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வணங்குவது பற்றி சாஸ்திரங்கள் கூறியுள்ளது. அந்த வரிசையில் விநாயகர் பெருமானை நீங்கள் புதன்கிழமை வழிபடுவதன் மூலம் அவர் மனம் மகிழ்ந்து உங்களுக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகரித்து தருவார் என்று கூறுகிறார்கள்.

மேலும் புதன்கிழமை பிள்ளையாரை வணங்கும் போது நீங்கள் அருகம்புல்லை எடுத்து பிள்ளையார் தலையில் வைத்தாலே போதும் அவர் மனம் குளிர்ந்து விடுவார். அது மட்டுமல்லாமல் நீங்கள் விநாயகர் பெருமானுக்கு எந்த மலரை வேண்டுமானாலும் வைத்து வழிபடலாம்.

 எனினும் தாமரை மலரை புதன்கிழமை வைத்து பூஜிப்பதின் மூலம் கணபதி மனம் மகிழ்ந்து உங்களுக்கு உரிய வரத்தை உடனே கொடுப்பார்.

 நீங்கள் விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான மோதகத்தை செய்து புதன்கிழமை அவரை மனதார வேண்டி வழிபட்டால் நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி மேல் வெற்றி வந்து உங்களை சேரும். அதை வாங்கித் தந்த பெருமை நம் பிள்ளையாரை சேரும்.

வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்க கூடிய அனைவரும் புதன்கிழமை அன்று விநாயகனை வணங்கி அவருக்கு விருப்பமான பொருட்களை வைத்து பூஜையை செய்வதின் மூலம் நீங்கள் வெற்றி பெற முடியும்.

மேலும் ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரதோயாத் என்ற மந்திரத்தை சொல்லி மனதார விநாயகரை பிரார்த்தித்து எண்ணற்ற பலன்களை பெறுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …