Today Rasi Palan in Tamil : நாளும் கோளும் ஜாதகத்தை நம்புபவர்களுக்கு சாதகமாகவே அமையும். அந்த வகையில் இன்றைய ராசி பலன்கள் என்னென்ன என்பதை இனி பார்க்கலாம். இன்றைய தின பலன் பிப்ரவரி 6 – ஆம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான பலன்கள்.
மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இந்த நாள் மிகவும் அற்புத நாளாக அமையும். பல விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். கிரியேட்டிவ் விஷயத்தில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். ஓய்வு நேரத்தில் ஆன்மீக புத்தகங்களை படிப்பதன் மூலம் தொல்லைகளை சமாளிக்க முடியும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். திருமணம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் அமையும். வாழ்க்கைத் துணையுடன் இன்று நேரத்தை அதிகமாக செலவழிப்பீர்கள். தொழிலைப் பொறுத்தவரை அமோகமாக இருக்கும் குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கலாம்.
மிதுனம்
மற்றவர்களோடு உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளக்கூடிய மிதுன ராசி நேயர்களின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். கடன் கொடுப்பதால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும். மனைவியிடம் இருந்து அதிக அன்பு கிடைக்கக்கூடிய நாளாக இது விளங்கும்.
கடகம்
தொழில் நிமித்தமாக முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக இது இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டாம். அண்டை வீட்டாரின் அறிவுறுத்தலின்படி உங்கள் துணை இன்று வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது.
சிம்மம்
விதியை நம்பி இருந்து இதுவரை வீணாய் போனது போதும். ஆரோக்கியத்தில் அக்கறை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு ஓய்வு என்று உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிட வேண்டும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே உங்கள் லட்சியங்களை நோக்கி நீங்கள் அமைதியாக உழைக்க வேண்டும். வெற்றி பெறும் வரை உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். பணத்தை எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை உங்கள் வீட்டில் இருக்கும் மூத்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் மனைவியிடம் அதிக அளவு அன்பு அதிகரிக்கும்.
துலாம்
பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்திருந்தால் அதை இழக்க கூடிய சந்தர்ப்பங்கள் என்று உண்டு. பெண் நண்பரிடம் கீழ் தரமாக நடந்து கொள்ள வேண்டாம். உங்கள் மனைவியின் கண்டிப்பான பேச்சின் காரணமாக உங்களுக்கு வருத்தமான சூழ்நிலை ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
விருச்சிகம்
இன்றைய தினத்தைப் பொறுத்தவரை விருச்சிக ராசி நேயர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு உடல் நிலையிலும் ஆரோக்கியம் காணப்படு.ம் உங்களது எண்ணத்தை பிறர் மீது திணிக்க வேண்டாம். வேலைகளில் உங்கள் கவனத்தை செலுத்துவது நல்லது. உங்கள் மனைவியிடம் இருந்து அன்பான இதமான ஆதரவை பெறுவீர்கள்.
தனுசு
பிக்னிக் செல்லக்கூடிய வாய்ப்பு இன்று தனுசு ராசி நேயர்களுக்கு உள்ளது. பணத்தை எப்படி சம்பாதிப்பது என்பது போன்ற ஐடியாக்களை இன்று பயன்படுத்திக் கொண்டால் நல்லது. மனைவியுடன் மாலை பொழுதை அன்பாக கழிக்க கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ள நாள் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்று வாழ்க்கை துணை அல்லது துணைவரால் டென்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டு மழை கிடைக்கும். சில்லரை வணிகர்கள் மற்றும் மொத்தமாக வியாபாரம் செய்பவர்களுக்கு மிகச்சிறந்த நாளாக இந்த நாள் அமையும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருப்பதால் வருத்தத்திற்கு உள்ளீர்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் என்பதால் மனதை விட புத்தியை கேட்டு எல்லா முடிவையும் நீங்கள் எடுக்க வேண்டும். மன வாழ்க்கையில் சிலப்பின் விளைவுகள் இருப்பதாக நீங்கள் என்று சிந்திப்பீர்கள் பணத்தை சேமிப்பதே இன்று மிகவும் நல்லது.
மீனம்
இன்று இனிமையான நாள் புதிய முயற்சிகள் தேடி வரும். நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் உள்ளது. உங்களுக்கு உள்ள பிரச்சனை பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். எனவே உங்களுக்கான நேரத்தை நீங்கள் ஒதுக்கி விடுங்கள். உடல் நலத்தில் அக்கரையாக இருக்க வேண்டிய நாள்.