“தம் பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம்..!” – இப்படி செய்யலாமா?

பிரியாணியை பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். குறிப்பாக தம் பிரியாணி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த வரிசையில் தக்காளி சாதத்தை தம் பிரியாணி ஸ்டைலில் செய்து அசத்து மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

 நீங்கள் செய்யக்கூடிய அந்த தக்காளி சாதம் ஒரு பருக்கை கூட மிஞ்சாத அளவிற்கு டேஸ்டாக எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தம் பிரியாணி போல தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்

1.தக்காளி நான்கு

2.பெரிய வெங்காயம் இரண்டு

3.இஞ்சி பூண்டு விழுது

4.இரண்டு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்

5.கடுகு அரை ஸ்பூன்

6.உளுந்து ஒரு டீஸ்பூன்

7.கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்

8.சீரகம் அரை டீஸ்பூன்

9.சோம்பு ஒரு டீஸ்பூன்

10.பச்சை மிளகாய் 4

11.வரமிளகாய் நான்கு

12.கருவேப்பிலை ஒரு கொத்து

13மல்லித்தழை பொடியாக நறுக்கியது அரை கப்

14.புதினா இலை அரைக்க

15.உப்பு தேவையான அளவு

16.மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு குக்கரை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து விட்டு பிறகு அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்றுங்கள்.

 பிறகு எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும். இது பொன் நிறமாக மாறியவுடன் நீங்கள் சீரகம் சோம்பு சேர்த்து லேசாக வெடிக்க விடவும். பிறகு இதனோடு நீங்கள் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் வரமிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்குங்கள்.

இது வதங்கிய பிறகு எடுத்து வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை நறுக்கி அதில் போட்டு பொன்னிறமாக வதக்கும்போதே பூண்டு இஞ்சி விழுதையும் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். பிறகு இதனோடு வெட்டி வைத்திருக்கும் தக்காளியும் உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

இவை நன்கு வதங்கிய பிறகு நீங்கள் ஒரு கொத்து கருவேப்பிலை நறுக்கி வைத்திருக்கும் புதினா இலைகளை சேர்த்து வதக்கி விடுங்கள். சிறிதளவு மிளகாய் தூள் போட்டு அந்த மிளகாய் தூளின் வாசம் போகும் வரை காத்திருக்கவும்.

 பிறகு நீங்கள் பொடி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை அதில் போட்டு நன்கு கலக்கி விடுங்கள். இதனை அடுத்து நீங்கள் எந்த அரிசியை சமைக்க விரும்புகிறீர்களோ அந்த அரிசிக்கு ஏற்றது போல நீரை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பையும் போட்டு குக்கரை மூடி விடுங்கள்.

 இதனை அடுத்து இரண்டு விசில்கள் விட்டுவிட்டு குக்கரை அணைத்து விடுங்கள். சில அரை மணி நேரம் கழித்து உங்கள் குக்கரை ஓபன் செய்து பாருங்கள். சூடான சுவையான தம் பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம் தயார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …