செப்பு பாத்திரம் பளபளக்க சூப்பர் டிப்ஸ் : இன்று சமையலறையில் அதிகளவு ஆக்கிரமித்து இருக்கும் பொருட்களில் தக்காளி சாஸ் ஒன்று என்று கூறலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைக்கக்கூடிய உணவுகளின் வரிசையில் இதுவும் ஒன்றாக தற்போது இந்திய சமையல் அறைகளை ஆக்கிரமித்து விட்டது.
இந்த தக்காளி சாஸ் மற்றும் தக்காளி ஹெச்பை பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பளபளப்பாக மாற்ற முடியும் என்றால் நீங்கள் அதை ஒத்துக் கொள்வீர்களா?
அப்படி உங்களுக்கு அதில் சந்தேகம் இருந்தால் நீங்களும் நாங்கள் கூறும் இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்கும். அதை எந்த தக்காளி சாஸ் கொண்டு சுத்தப்படுத்தி பின் உங்களுடைய கருத்துக்களை எங்களிடம் தெரிவிக்கலாம்.
தக்காளி சாஸை பயன்படுத்தி சுத்தப்படுத்தும் பொருட்கள்:
உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாய்கள் பொதுவாக துருப்பிடித்திருக்கும் அல்லது அழுக்கு அடைந்த நிலையில் இருக்கும். இந்த துருவை எளிதாக நீக்குவதற்காக நீங்கள் தக்காளி சாஸை அந்த குழாயின் மீது தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.
பின்னர் நீரில் எலுமிச்சை சாறு, வினிகர், பேக்கிங் சோடா கலந்து கொண்டு நீங்கள் ஸ்க்ராபரில் அந்த நீரில் கலந்த கலவையைத் தொட்டு எடுத்து நன்கு தேய்த்து விட்டு பிறகு நீரால் கழுவி விட்டு பாருங்கள் பளிச் என்று காட்சி அளிக்கும்.
அதுபோலவே இரும்பு வடசட்டிகளிலும் நீங்கள் சமைத்து அடி பிடித்து இருக்கும். அந்த அடி பிடித்த கரையை நீக்குவது அவ்வளவு எளிதல்ல. அப்படி இருக்கக்கூடிய இருப்புச் சட்டியில் தக்காளி சாஸை நன்கு தேய்த்து விடவும். குறைந்தது மூன்று மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் ஆவது இதை ஊற விட வேண்டும்.
இதனை அடுத்து நீங்கள் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பை பயன்படுத்தி நன்கு தேய்த்து விட்டால் போதுமானது. மிக விரைவில் உங்களது இருப்புச் சட்டியும் பளபளவென ஒரு மாற்றத்தை உங்களுக்கு தந்துவிடும்.
இதுபோலவே வெள்ளி நகைகள் கருப்பாக இருக்கும் பட்சத்தில் தக்காளி சாஸை கொண்டு அந்த வெள்ளி நகைகளின் மீது தடவி விட்டு பல் தேய்க்கும் பிரஸ்ஸின் மூலம் சுத்தப்படுத்தி கழுவினால் போதும். வெள்ளி நகைகள் அழகாக மெருகேறிய வண்ணம் காட்சி தரும்.
உங்கள் வீட்டில் சுவாமி அறையில் பயன்படுத்தப்படும் பித்தளை பொருட்களை கரைபிடித்து இருந்தாலும் தக்காளி சாஸை தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் உப்பு நீரில் அனைத்தையும் தேய்த்து விட்டால் பளபளவென பக்காவாக மின்னும்.