“அசைவ உணவின் ராஜா மீன்..!” – சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

அசைவ உணவுகளிலேயே உடலுக்கு அதிக அளவு நன்மையை தரக்கூடிய உணவாக மீன் உணவு உள்ளது. எனவே மீனினை அதிக அளவு நீங்கள் உங்கள் உணவுக்கு சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.

 குறிப்பாக உங்களுக்கு மாரடைப்பு பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.

Fish food

மீனில் அதிக அளவு வைட்டமின் டி சத்து அடங்கியுள்ளதால் மீனைத் தொடர்ந்து சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு எலும்பு ஆரோக்கியமாகும்.மேலும் வாரத்தில் இரண்டு முறையாவது முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எலும்பு தேய்மான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆனாலும் சரி பாதிக்கப்படாதவர்கள் ஆனாலும் சரி மீனை எடுத்துக் கொள்வதின் மூலம் அவர்களுக்கு தேவையான கால்சிய சத்து எளிதில் கிடைக்கும்.

குழந்தைகளில் அதிக அளவு காணப்படக்கூடிய ஆஸ்துமா நோயை குணப்படுத்தக்கூடிய சக்தி இந்த மீனில் இருக்கக்கூடிய வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசிய ஊட்டச்சத்துக்களுக்கு இருப்பதால் கட்டாயம் உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் மீன் உணவை கொடுத்து சுவாசப் பிரச்சனைகள் இருந்து அவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

Fish food

மேலும் மீனில் இருக்கும் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை தடுக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது.இது வயதான காலத்தில் ஏற்படுகின்ற அல்சைமர் என்ற மூளைக் கோளாறு நோய்களையும் குணப்படுத்துவதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளது.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினமும் மீனை சாப்பிடுவதின் மூலம் எளிதில் உறக்கம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் இது தசை வலிமையை மேம்படுத்தி கொடுக்கும் ஆற்றல் மீன் உணவு வகைகளுக்கு ஆற்றல் உள்ளது.

Fish food

மீன் என்பது இரும்பின் மூலமாக இருப்பதால் இரும்பு சத்து குறைபாட்டை நீக்கி உடலுக்கு தேவையான இரும்பு சத்து குறைக்கக்கூடிய ஆற்றல் இந்த மீன் உணவுகளுக்கு உள்ளது. எனவே மீனை வாரத்தில் மூன்று முறையாவது நீங்கள் எடுத்துக் கொள்வது நல்லது.

Fish food

மீன் உணவை சாப்பிடுவதின் மூலம் உங்கள் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். முடி மற்றும் சருமங்கள் ஆரோக்கியமாக பராமரிக்கப்படும்.இதில் குறைவான கலோரி உள்ளதால் உடல் எடை எளிதில் கூடாது. எனவே மீன் உணவை இனிமேல் உங்கள் வீட்டில் கட்டாயப்படுத்தி பாருங்கள் ஆரோக்கியத்திற்கு குறைய இருக்காது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …