திரையுலகின் இருண்ட பக்கங்கள்.. அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை எதிர்கொண்ட ஐந்து நடிகைகள்..!

தமிழ் திரை உலகில் திரை மறைவில் நடக்கின்ற விஷயங்களில் ஒன்றான அட்ஜஸ்ட்மென்ட் குறித்து அடிக்கடி இணையங்களில் அதிக அளவு செய்திகள் பல்வேறு வகைகளில் பரவி வருகிறது.

அந்த வகையில் இந்த பதிவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை சந்தித்த ஐந்து நடிகைகளை பற்றியும் அவர்கள் அந்த பிரச்சனையை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது குறித்தும் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை..

திரையுலகில் நடிக்க வேண்டும் என்றாலோ தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை அதிகரித்து இருப்பதாக இளம் நடிகைகள் முதற்கொண்டு முன்னணி நடிகைகள் வரை இது பற்றி ஓப்பனாக பேசி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2018-ஆம் ஆண்டு மீடு என்ற ஹேஷ் டேக் மூலம் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை வெளிப்படையாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள்.

அந்த வகையில் தங்களுக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசிய ஐந்து நடிகைகளின் விவரங்களை விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

எதிர்கொண்ட ஐந்து நடிகைகள்..

சீரியல்களில் நடித்து வரும் நடிகை ஜீவிதா அண்மை பேட்டி ஒன்று அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசிய இவர் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்தியின் சகோதரிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

மேலும் மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் சமீபத்தில் சன் டிவியில் நிறைவடைந்த அருவி தொடரிலும் நடித்திருக்கிறார். அத்தோடு தற்போது டிஆர்பிஎல் கெத்து காட்டி வரும் மருமகள் சீரியலில் நடித்து வரக்கூடிய இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதும் அதைக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சொன்னதை அடுத்து திரைப்பட வாய்ப்பே வேண்டாம் என்று உதறிவிட்டார்.

இவரை அடுத்து பிரபல சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை திருமணம் செய்து கொண்டு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து பேசும் பொருளாக மாறிய நடிகை சம்யுக்தாவும் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை சந்தித்து இருப்பதாக சொல்லி இருக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நடித்தவர்.

இவரிடமும் திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென்றால் கட்டாயம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை விதித்ததை அடுத்துத்தான் சீரியலே போதும் என்று முடிவு செய்து விட்டதாக ஓப்பனாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

மூன்றாவதாக சரத்குமார் மகள் வரலட்சுமி ஒரு மிகப்பெரிய திரை பின்புலத்தோடு இருந்தாலும் இவரிடமும் அதே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய பல வற்புறுத்தியதாக சொல்லி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். போடா போடி திரைப்படத்திற்கு பிறகு இவருடைய திறமைக்கு ஏற்ப கதாபாத்திரம் அமையாததற்கு காரணம் சில திரைப்படங்களில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று சொன்ன விவகாரம் தான்.

மேலும் சீரியல் நடிகை தரணியும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாக அண்மை பேட்டியில் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் காமெடி நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்திருக்க கூடிய இவர் இளம் வயதில் சில படங்களில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு வந்த போது அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியதை அடுத்து சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

அதுபோலவே தற்போது இடம் நடிகையாக திகழும் ரெஜினா தன்னுடைய வாழ்க்கையில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை சந்தித்துதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் துணை இயக்குனர் ஒருவர் போன் செய்து திரைப்பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியுமா? என்று கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதனை அடுத்து ஐந்து நடிகைகளுக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி விரிவாக தெரிந்து கொண்ட ரசிகர்கள் இதுபோன்ற விவகாரங்கள் என்று முற்றுப்பெறுமோ என்று பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version