தமிழ் சினிமாவில் அதிரி புதிரியாய் சம்பளத்தை ஏத்திய 6 நடிகர்கள்.. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க!.

தமிழ் சினிமாவை பொருத்தவரை சம்பளம் என்பது நடிகர்களின் மார்க்கெட்டை பகுத்து சொல்வதற்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது. குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறைந்த மார்க்கெட்டைதான் பெற்று இருக்கிறார்கள் என்று தமிழ் சினிமாவில் அறியப்படுகிறது.

தமிழில் பெரும்புள்ளியாக இருக்கும் பல நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதை வைத்துதான் அவர்கள் டாப் நடிகர்களா? என்று அறியப்படுகிறது. உதாரணத்திற்கு ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவராக இருப்பதால்தான் அவர் தமிழில் டாப் நடிகராக அறியப்படுகிறார்.

நடிகர் விஜய்:

அதே போல தான் அஜித் விஜய் போன்ற நடிகர்களும் அறியப்படுகிறார்கள் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களையும் அவர்கள் வாங்கும் சம்பளத்தையும் இப்பொழுது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் சம்பள விஷயத்தை பொருத்தவரை முதல் இடத்தில் இருக்கும் டாப் நடிகராக விஜய்தான் இருந்து வருகிறார். தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்காக 200 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருகிறார் ரஜினிகாந்த்தை பொருத்தவரை ஜெயிலர் திரைப்படத்திற்காக 150 கோடி சம்பளமாக வாங்கினார் என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் நடிப்பதால் ரஜினியின் சம்பளம் உயரம் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

கமல்ஹாசன்:

மூன்றாவது இடத்தில் இருப்பவர் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தின் பொழுது 90 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். ஆனால் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் என்பது அதிகரித்து இருக்கிறது.

எனவே அதற்கு பிறகு சம்பளமும் அதிகரித்திருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இப்பொழுது இந்திய 2 திரைப்படமும் வெளியாகி இருப்பதால் விக்ரம் 3 திரைப்படத்திற்கு கண்டிப்பாக 100 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவார் என்பது ரசிகர்களின் அனுமானமாக இருக்கிறது.

நான்காவது இடத்தில் நடிகர் அஜித் இருக்கிறார் அஜித் சம்பளமாக 85 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. அஜித் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில்லை என்பது பலரும் அறிந்த விஷயமே ஒரு வேலை மற்ற நடிகர்களுடன் போட்டி போட்டு நடிக்கும் பட்சத்தில் அஜித்தின் சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

சிம்பு:

ஐந்தாவது இடத்தில் நடிகர் சிம்பு இருக்கிறார் மாநாடு திரைப்படத்தின் மூலமாக 100 கோடி ஹிட் கொடுத்த பிறகு தற்சமயம் 40 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார் நடிகர் சிம்பு. அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷும் சிம்புவுக்கு நிகராக 40 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார். தற்சமயம் தமிழ் சினிமாவில் போட்டி நடிகராக சிம்புவும் தனுஷும் இருந்து வருகின்றனர். இவர்களெல்லாம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களாக பார்க்கப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version