பெண்களுக்கு குடும்ப கணக்கினை கற்றுக்கொடுத்த பல்லாங்குழி.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் இந்த பல்லாங்குழியும் ஒன்று. குறிப்பாக கருவுற்ற பெண்களும், பூப்பெய்திய பெண்கள்  வீட்டை விட்டு விலகி இருக்கக்கூடிய நேரங்களில் தோழிகளுடன் சேர்த்து விளையாடக்கூடிய விளையாட்டாக பல்லாங்குழி இருந்தது.

வட்டமாக மரத்தில் செதுக்கப்பட்ட குழிகள் கொண்ட இதில் புளியம் கொட்டைகள் மற்றும் சோழிகளை நிரப்பி கொண்டு விளையாடுவார்கள். கடைசி முத்து தீரும் வரை ஆட்டம் நீடிக்கும்.

பல்லாங்குழி ஆட்டம் மற்றும் வகைகள்:

பல்லாங்குழி ஆட்டத்தை பாண்டி ஆட்டம் எனவும் அழைப்பர். முத்தாட்டம், பசுவாட்டம், கட்டாட்டம் என மூன்று வகை பல்லாங்குழி ஆட்டம் உண்டு.

ஐந்து  வயதுக்கு மேல் இருக்கக் கூடிய குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாடலாம். இந்த விளையாட்டில் இருவர் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த விளையாட்டை அதிகமாக விளையாடக்கூடியவர்களின் கை விரல்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். அத்தோடு மூளையின் திறன் கூடுவதோடு கணித புலமை மேம்படுகிறது.

இருவர் மட்டுமே ஆடும் பல்லாங்குழியில், 7 குழியில் குழிக்கு நான்கு முதல் பனிரெண்டு சோழிகள் கொண்டு ஆட்டத்தை தொடங்குவர். முதல் பெண் ஆடத் தொடங்கும் போது எந்தக் குழியிலிருந்து தொடங்கினால் செல்வம் (வெற்றி) சேர்க்கலாம் என்று கணக்கு போட்டு தொடங்குகிறார்.

இந்த விளையாட்டை விளையாடுவதற்கு புத்திசாலித்தனம் தேவை. அத்தோடு எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி என்பதை மிக எளிதாக தெரிந்து கொள்ள முடியும். சாமர்த்தியமாக முத்துக்களை ஒவ்வொரு குழியிலும் போட்டு காசி அடிப்பது என்பது இந்த விளையாட்டின் மிகப்பெரிய ஹைலைட்.

சேமிக்கும் பழக்கத்தையும், பிறருக்கு பகிர்ந்தளிக்கும் வழக்கத்தையும் இந்த விளையாட்டு பெண்களுக்கு கற்று தெரிகிறது.

பல்லாங்குழி விளையாட்டு தமிழகத்தில் இருந்து இந்தியா முழுவதும் பரவியுள்ளது. அதுமட்டுமல்ல இலங்கை, சிங்கப்பூர், மலேசியா,தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளிலும் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டாக விளங்குகிறது.

நம் முன்னோர்கள் பெண்கள் தங்களது வாழ்வில்  இல்லறத்தை மேற்கொள்ளும் போது அந்த வீட்டை சரியாக நிர்வாகம் செய்யக் கூடிய திறனை வளர்ப்பதற்காக இந்த பல்லாங்குழி வீட்டுக்குள்ளேயே இருந்து விளையாட கூடிய விளையாட்டாக அறிமுகப்படுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …