“எப்படி வெயில் அடித்தால் என்ன? – இத ஃபாலோ பண்ணு சருமம் ஜொலி ஜொலிக்கும்..!!

கொளுத்தி அடிக்கும் வெயிலில் சற்று நேரம் வெளியே சென்று வந்தாலே உங்கள் முகத்தின் பொலிவு அப்படியே மாறிவிடும். அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து விட்டதால் பொலிவிழந்து போகும் உங்கள் முகத்தை எப்படி ஜொலி ஜொலிக்க வைக்கலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இயற்கையான சில பராமரிப்பு வழிகளை நாம் கடைபிடித்தாலே போதும் மிக எளிமையாக நமது முக பளபளப்பை நம்மால் பாதுகாக்க முடியும். அதற்காக சில எளிய குறிப்புகளை இப்போது கூறுகிறேன்.

முகத்தை பாதுகாக்கும் பாரம்பரிய மருத்துவ குறிப்புகள்

உங்கள் சருமத்தில் அதிகமாக இருக்கும் எண்ணெய், அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதற்கு அற்புதமான பணியை பப்பாளிப்பழம் செய்கிறது. எனவே இந்த பப்பாளி பழம் பழுத்திருந்தால் அதனோடு சிறிதளவு தேன் சேர்த்து நன்கு பிசைந்து முகத்தில் பூசி வாருங்கள். இப்படி நீங்கள் பூசி வருவதின் மூலம் உங்கள் முக சுருக்கம் மாறி முகப்பொலிவுடன் அழகாக காட்சி தரும்.

கோடையில் உடலில் குளிமை மாறி சூடு அதிகரிக்கும். எனவே உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும். ஒவ்வாமைக்கான எதிர்ப்புத் திறனை அதிகரிக்கவும் சோற்றுக்கற்றாழை சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்த சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை எடுத்து சிறிதளவு எலுமிச்சம் பழம் சேர்த்து ஒன்றாக கலந்து முகம் மற்றும் உங்கள் சருமப்பகுதிகளில் தேய்த்து வர வெயிலினால் ஏற்படக்கூடிய கருமை நிறம் எளிதில் மறைவதோடு உங்கள் மேனிக்கு தேவையான ஈரப்பதமும் இயற்கையாகவே கிடைக்கும்.

ஆக்சிஜனேற்று பண்புகள் அதிகளவு இருக்கக்கூடிய மஞ்சளை நீங்கள் அடிக்கடி தயிர் அல்லது கடலை மாவோடு சேர்ந்து பேஸ் பேக்காகவோ அல்லது குளிக்கும்போது உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு குளிப்பதால் உங்கள் சருமம் பளபளப்பாக மாறிவிடும்.

இயற்கையாகவே பாக்டீரியாக்களை எதிர்க்கக்கூடிய சக்தி சந்தனத்திற்கு உள்ளது. எனவே இந்த சந்தனத்தை நீங்கள் நன்கு உரைத்து தேய்ப்பதின் மூலம் முகத்தில் ஏற்படும் முகப்பரு போவதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகத்தை ஒளிர செய்யக்கூடிய தன்மை இதற்கு உள்ளது.

அழகு கலையில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் தேன்  சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தருவதோடு உங்கள் மேனி அழகையும் பாதுகாக்க உதவி செய்வதால் தேனினை லேசாக தேய்த்து அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை உங்களது சருமம் அடையும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …