நடிகை ரேவதி நிஜ வாழ்க்கையில் நடந்த.. பலரும் அறியாத நெஞ்சை உலுக்கும் கதை..!

மிக சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆன நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேவதி. பள்ளி படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர் மண்வாசனை என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அப்போதைய காலகட்டங்களில் எல்லாம் இயக்குனர் பாரதிராஜா புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்துவதற்கு பள்ளிவாசலில்தான் காரை கொண்டு நிறுத்திவிட்டு காத்திருப்பாராம். அப்பொழுது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பெண்களை அவர்களது வீட்டிலேயே சென்று பேசி சினிமாவில் கதாநாயகி ஆக்குவாராம்.

ரேவதி அறிமுகம்:

அப்படியாகதான் நடிகை ரேவதியையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதனை தொடர்ந்து நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போதைய இளைஞர்களுக்கு கனவு கன்னியாக ரேவதி இருந்து வந்தார்.

ஆனால் ரேவதி அவரின் சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை அவர் சந்தித்திருக்கிறார். ரேவதி 1986 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திரா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2022 முதலே அவர்கள் இருவரும் பிரிந்து வாழ துவங்கி விட்டனர்.

இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது அவர்களுக்கு இடையே குழந்தை இல்லாததுதான் இதற்கான காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ரேவதிக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் ஏனோ இவர்கள் இருவருக்கும் குழந்தைகளை இல்லாமல் இருந்தது.

திருமண பிரிவு:

அதனை அடுத்து 2013 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் அதற்குப் பிறகு நடிகை ரேவதி அதிகமாக ஒரு குழந்தையுடன் சுற்றி திரிவதை பலரும் பார்க்க முடிந்தது. பல விழாக்களுக்கு வரும் பொழுது கூட கையில் ஒரு ஐந்து வயது குழந்தைகளுடன் அவர் வருவதை பார்க்க முடிந்தது.

மதி என்ற அந்த பெண் குழந்தை யார் என்பது பலருக்கும் கேள்வியாக இருந்து வந்தது. பிறகு அது ரேவதி அனாதை ஆசிரமத்தில் இருந்து தத்தெடுத்து வளர்க்கும் குழந்தை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தது.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மகி தன்னுடைய குழந்தை என்பதை ரேவதி வெளிப்படுத்தினார். டெஸ்ட் டியூப் குழந்தை முறையில் தான் பெற்றெடுத்த குழந்தைதான் மகி என்று கூறியிருந்தார் ரேவதி.

ரேவதி இப்படி வெளிப்படையாக ஒரு பேட்டியை கொடுத்த பிறகு சுரேஷ் சந்திரா மேனன் திரும்பவும் ரேவதியுடன் இணைந்து வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ரேவதி இதுவரை எந்த பதிலும் கூறவில்லை அவர்களுக்கிடையே எந்த பிரச்சனையின் காரணமாக பிரிந்தார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை என்றாலும் கூட அவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version