சின்ன வயசுலேயே அந்த நடிகரை கல்யாணம் கட்டிக்க ஆசை.. உண்மையை உளறிய அனிமல் பட நடிகை!!

யாராக இருந்தாலும் சின்ன வயதில் அவர்களுக்கு என்று சின்ன சின்ன ஆசைகள் எழுவது இயற்கை தான். அந்த வகையில் திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து இருக்கும் அனிமல் பட நடிகைக்கும் சின்ன வயதில் ஒரு ஆசை இருந்துள்ளதாம்.

அந்த ஆசை என்ன? அதுவும் எப்படிப்பட்ட ஆசை என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சின்ன வயசுலேயே அந்த நடிகரை கல்யாணம் கட்டிக்க ஆசை..

இந்த அனிமல் பட நடிகை பாலிவுட் சினிமாவில் இளம் வயதிலேயே சென்சேஷனல் நடிகையாக வலம் வந்தவர். இவருக்கு என்று தனி ரசிகர் படை உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவர் நடிப்பில் வெளி வரும் படங்களை பார்ப்பதற்கு என்றே ரசிகர் வட்டாரம் காத்திருக்கும். அப்படிப்பட்ட நடிகை தான் சின்ன வயதில் ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.

அந்த விஷயத்தை அவரே அவர் தன் வாயால் அண்மை பேட்டி ஒன்றில் சொல்லியது பெரும் ஆச்சரியத்தை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நடிகை மாம் என்ற படத்தில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடிக்கக்கூடியவர்.அது மட்டுமல்லாமல் அண்மையில் புல்புல் என்ற வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீட்சை பெற்றார்.

மேலும் கடந்த ஆண்டு வெளியாகி ஒரு மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமான அனிமல் படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் ரோலை செய்திருக்கிறார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் அந்த நடிகை யார் என்று.

உண்மையை உளறிய அனிமல் பட நடிகை..

நீங்கள் நினைத்தது சரி தான் அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை த்ரிப்தி டிம்ரி. அனிமல் படத்தில் நடித்ததின் மூலம் நல்ல ரீச்சை அடைந்ததோடு அனைவரும் இவரது நடிப்பை வெகுவாக பாராட்டி வரவேற்றார்கள்.

தற்போது இவர் ராஜ்குமார் ராவோடு இணைந்து மற்றொரு படத்தில் நடிப்பு வருகிறார். இதை அடுத்து சமீபத்தில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்ற விஷயத்தை கேட்டதற்கு மறைக்காமல் ஷாருக்கான் என்ற பதிலை தந்திருக்கிறார்.

மேலும் சிறு வயதில் அதாவது ஐந்து முதல் ஆறு வயது இருக்கும் போதே ஷாருக்கான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்ததாகவும், அதை தன் குடும்பத்தாரிடம் சொல்லி இருப்பதாகவும் நடிகை த்ரிப்தி டிம்ரி ஓப்பனாக பேசியிருக்கிறார்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் பேசும் பொருளாகி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version