மீண்டும் அஜித்துடன் ஜோடி சேருகிறாரா? திரிஷா… அதுவும் ஏகே 62 படத்திலா?

 பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த திரிஷா  காட்டில் நல்ல மழை என்றுதான் கூறவேண்டும்.ஏன் என்றால் இந்த படத்தில் தனது அழகாலும் அற்புதமான நடிப்பாலும் மக்கள் கவர்ந்து இவர் மக்கள் விரும்பும் நாயகியாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர இவர் இருக்கிறார்.

 இதனை அடுத்து இவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வந்துள்ளது.இதனால் இவர் மிகவும் ஹேப்பியான மூடில் திரிஷா இருப்பதாக கேள்வி.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தில் ஹீரோயினியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

 மேலும் இந்த படத்தில் இவர் நடிப்பதற்கு உரிய அறிவிப்பு மிக விரைவில் வெளிவந்து வருகின்ற டிசம்பர் மாதம் ஷூட்டிங் துவங்கலாம் என்ற நிலையில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தியும் தற்போது வெளிவந்துள்ளது.

 அந்த செய்தி என்னவென்றால் இவர் மீண்டும் தல அஜித்துடன் இணைந்து நடிக்க இருப்பது தான். ஏற்கனவே இவர் அஜித்துடன் இணைந்து கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

 இந்த வரிசையில் தற்போது அஜீத் நடிக்கவுள்ள ஏகே 62 படத்திலும் திரிஷாவை ஹீரோவாக புக் செய்ய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

 இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்துக்கான இசையை அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு பதிலாக திரிஷா என்ற பேச்சு அடிபட்டு வருகிறது இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும்.

மேலும் தற்போது இந்த இரண்டு விஷயங்களையும் கேள்விப்பட்ட திரிஷாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.எப்படியோ இவர் தற்போது நயன்தாராவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு சென்றுவிட்டார் என்று இவரது ரசிகர்கள் உற்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …