முன்னாடி நாங்க நண்பர்களா இருந்தோம்.. ஆனால்.. திரிஷா குறித்து நயன்தாரா ஓப்பன் டாக்..!

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகிலும் நம்பர் ஒன் நடிகையாக திகழும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அந்த இடத்திற்காக தொடர்ந்து போராடி தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்து இருக்கும் திரிஷா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இந்த இரண்டு ஹீரோயினிகளும் தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களின் மனதில் தங்களுக்கு என்று நிரந்தர பெயரை பெற்றவர்கள். அது மட்டுமல்லாமல் இவர்களில் யார் முன்னணி நடிகை யாருக்கு முதலிடம் என்பது இரண்டு ஹீரோயின்களின் ரசிகர்கள் மத்தியிலும் கடும் போட்டா போட்டி இருக்கும்.

முன்னாடி நாங்க பிரெண்ட்ஸ்..

அத்துடன் ரசிகர்களின் மத்தியில் தான் அந்தப் போட்டி இருந்ததே ஒழிய ஆரம்ப நாட்களில் நடிகை நயன்தாராவும், நடிகை திரிஷாவும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?.

அவர்களின் சிறப்பான நட்பு ,மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. இடையில் ஏற்பட்ட மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கால் இருவரும் பேசிக் கொள்வதை அப்படியே நிறுத்திவிட்டார்கள் .மேலும் இரு துருவம் போல விலகி விட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் நடிப்பு துறையிலும் கடுமையான போட்டா போட்டி இவர்கள் இருவர் மத்தியிலும் உள்ளது என்று சொல்லலாம். இதனை அடுத்து திரை உலகில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த திரிஷா தற்போது முதல் இடத்திற்கே வந்துவிட்டார் என்று சொல்லக்கூடிய வகையில் முன்னணி நடிகர்களோடு பல படங்களில் நடித்த வருகிறார்.

நயன்தாராவிற்கு திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் சரியாக கை கொடுக்கவில்லை. அந்த வகையில் அண்மையில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படமும் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்று தந்தது.

ஆனா இப்போ..

இதனை அடுத்து எப்படியும் ஒரு வெற்றியை தமிழில் கொடுத்து விட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கக்கூடிய நயன்தாரா அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ஒரு மிக சிறந்த தொழில் அதிபராக மாறி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார்.

மேலும் அண்மை பேட்டியில் நடிகை நயன்தாரா பேசும் போது ஆரம்ப காலத்தில் நானும் திரிசாவும் மிகச்சிறந்த தோழிகளாக இருந்தோம். ஆனால் மிஸ்அண்டஸ்டிங் காரணமாக இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டோம்.

எதனால் நாங்கள் பேசுவதை நிறுத்தினோம் என்பது எங்கள் இருவருக்குமே தெரியாது.எனினும் இருவரும் பிசியான செட்யூல்டில் இருந்ததால் அதைப் பற்றி நினைக்கவும் இல்லை. அதற்கான நேரமும் அமையவில்லை.

திரிஷா குறித்து நயன் ஓப்பன் டாக்..

இதனை அடுத்து ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்வில் என்னை சந்தித்த திரிஷா அவராகவே முன் வந்து என்னிடம் பேசியதை அடுத்து நானும் அவருடன் மனம் திறந்து பேசினேன்.

எப்படி இருவரும் பேசாத போது தானாக முன் வந்து பேசக்கூடிய அற்புதமான குணம் கொண்டவர் தான் நடிகை திரிஷா. இவரை போல் யாரு இருப்பார்கள் என்று திரிஷாவை புகழ்ந்து நயன்தாரா பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.

மேலும் இதனை அடுத்து இருவரும் நன்கு பேசி வருவதாகவும் இதற்கு மேல் என்ன தேவை என்பது போல் நயன்தாரா பேசியிருக்கும் பேச்சு ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் திரை உலகில் முன்னணி நடிகைகளாக விளங்கக் கூடிய இவர்கள் நட்பு என்றென்றும் தொடர்ந்து எல்லா வகையான இன்பத்தையும் செல்வத்தையும் இவர்களுக்கு அள்ளித் தர வேண்டும் என்று ரசிகர்கள் இறைவனை பிரார்த்திப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version