என்னது..சோழ இளவரசி குந்தவையின் நிஜ புகைப்படமா? மலேசிய பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்கா?

 தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிகை திரிஷா நடித்திருந்தார்.

 

 நடிகை திரிஷா எப்படி சோழர் இளவரசி குந்தவையாக பிரதிபலித்து இருந்தாரோ அதே போல் உள்ள ஒரு உண்மையான குந்தவை புகைப் படத்தை தற்போது மலேசியா பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து  வெளியிட்டு ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

 இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள். இதற்கு காரணம் இந்த புகைப்படத்தில் இருக்கும்  ஆடை ,அணிகலன், அலங்காரம் அனைத்துமே தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்த திரிஷாவிற்கு செய்யப்பட்ட ஒப்பனை போலவே உள்ளது.

இதற்குக் காரணம் நீண்ட வரலாற்றுக் காவியத்தை படம் பிடிப்பதற்கு முன்பே இதற்கான வரலாற்று ஆய்வுகளில் அவர்கள் ஈடுபட்டு  முக்கிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல வித ஆவணங்களை திரட்டி அதிலிருந்து இவர்கள் இந்த பட கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் படத்தை பொருத்தவரையில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறந்த ஆய்வு செய்து அதன் வழியில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில்  பயன்படுத்தப்பட்ட ஆபரணங்கள் அணிகலன்கள் அனைத்தும் சோழர் காலத்தை ஒட்டியே இருக்கும். அவர்கள் எதைப் பயன்படுத்தினார்கள் அதையே இவர்களும்  பயன்படுத்தியுள்ளார்கள்.

 எனவே தான் இந்தப் படத்தில் இருக்கக்கூடிய ஒப்பனையும் நடிகை திரிஷாவிற்கு போடப்பட்ட ஒப்பனையும் ஒரே போல் இருப்பதாக  படக் குழுவில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து சிறிய விஷயம் என்றாலும் அதை மெனக்கெட்டு செய்வதில் மணிரத்னம் ஈடு இணை இல்லாதவர் என்பது தெரிந்துவிட்டது.

மேலும் தற்போது மலேசியா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழ இளவரசி குந்தவையின் அரிய புகைப்படத்தை ராஜராஜன் வழிவந்த இந்து சொந்தங்கள் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது.

இதையடுத்து தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பை பட்டு வருகிறது. விரைவில் திரையில் நாம் அதை காணலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam