சர்ச்சை இயக்குனரின் படத்தில் திரிஷா.. ஏன் இந்த விபரீத வேலை.. செம்ம கிளாமர் ட்ரீட் இருக்கு..!

தமிழ் சினிமாவில் நயன்தாராவிற்கு பிறகு பெரிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை திரிஷா. திரிஷா தொடர்ந்து நடிக்கும் படங்களில் இப்பொழுதெல்லாம் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

பெரும்பாலும் திரிஷா நடிக்கும் திரைப்படங்கள் பெரிய ஹீரோக்கள் படங்களாகவே இருக்கும் என்கிற நிலை இருக்கிறது. ஏனெனில் மார்கெட்டை இழந்து பிறகு ரீ எண்ட்ரி கொடுத்த பிறகு திரிஷா தொடர்ந்து தோல்வி படங்கள் நடிப்பது அவரது மார்க்கெட்டுக்கு பிரச்சனையாக முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்.

அர்ஜுன் ரெட்டி படம்:

இந்த நிலையில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனெனில் சந்தீப் ரெட்டி வங்கா தனது முதல் திரைப்படத்திலேயே அதிக விமர்சனத்திற்கு உள்ளான இயக்குனர் ஆவார். அவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் விஜய் தேவர கொண்டா கதாநாயகனாக நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் சைக்கோ கதாபாத்திரம் மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். அந்த படத்தை பார்த்த பலருமே இவர் இன்னொரு பாலா என்று கூறி அவரை விமர்சித்து வந்தனர். அந்த அளவிற்கு படத்தில் கதாநாயகனின் கதாபாத்திரம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது.

சர்ச்சைக்குள்ளான இயக்குனர்:

இருந்தாலும் கூட அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. பிறகு அந்த படமே தமிழில் ஆதித்ய வருமா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதேபோல அடுத்து அவர் இயக்கிய அனிமல் திரைப்படமும் வெகுவான விமர்சனத்திற்கு உள்ளானது.

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் கிட்டத்தட்ட அர்ஜுன் ரெட்டிக்கு சற்றும் குறையாத திரைப்படமாக இருந்தது. அவ்வளவு எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற பிறகும் கூட இயக்குனர் தனது கதை அமைப்பை மாற்றிக் கொள்ளாமல் இந்த திரைப்படத்தையும் அப்படியே எடுத்திருந்தார்.

அதிகபட்சம் இவரது திரைப்படங்களில் ஆணாதிக்க தன்மை அதிகமாக இருக்கிறது என்பது பலரது குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அதே சமயம் எவ்வளவு மோசமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானாலும் கூட அந்த திரைப்படங்கள் எல்லாமே அதிக வெற்றியை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் ரெடியாக இருந்தாலும் சரி அனிமல் திரைப்படமாக இருந்தாலும் சரி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று நிறைய வசூல் செய்த படங்களாக இவை இருந்து வருகின்றன. இந்த நிலையில் பாலிவுட் நடிகைகளே இவரது திரைப்படங்களை விமர்சனம் செய்ய துவங்கி இருக்கின்றனர்.

இப்படியான ஒரு நிலையில் அடுத்து சந்தீப் அடுத்த பட வேலைகளை தொடங்கி இருக்கிறார். இந்த படத்துக்கு ஸ்பிரிட் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் பிரபாஸ் கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால்தான் தமிழ் ரசிகர்கள் தற்சமயம் அதிர்ச்சியில் இருக்கின்றனர் திரிஷா சந்தீப் ரெட்டி திரைப்படத்தில் நடிக்கிறாரா என்பதுதான் அவரது அவர்களது கவலையாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version