இந்த விஷயத்துல சிம்புவை விட விஜய் கம்மி தான்.. திரிஷா ஓப்பன் டாக்..!

திரிஷா தனது இரண்டாவது இன்னிங்ஸ்க்கு பிறகு தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்திருக்கிறார்.

41 வயதாகியும் தனது மார்க்கெட் குறையாமல் நட்சத்திர அந்தஸ்திலிருந்து வரும் நடிகை திரிஷா தற்போது விஜய், கமல், அஜித் என ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

நடிகை திரிஷா:

முன்னதாக அவர் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதை எடுத்து தற்போது அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனின் தக்லைஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் திரிஷா நடித்து வருவது குறிப்பிட்டதக்கது.

இதன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் மிகப்பெரிய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை 2000 கால கட்டத்தில் பிடித்து வைத்திருந்தார் நடிகை திரிஷா.

திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னதாக 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சூப்பர் ஹிட் திரைப்படம்:

அதே ஆண்டில் ஜோடி திரைப்படத்தில் அனுராதா என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் .

அடுத்தடுத்து 2002 ஆம் ஆண்டில் மௌனம் பேசியதே திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து சிறந்த நடிகைகான பிலிம்பேர் விருது பெற்றார் நடிகை திரிஷா.

தொடர்ந்து கில்லி, ஆயுத எழுத்து, ஆறு, சம்திங் சம்திங், பீமா , குருவி , அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா , மன்மத அம்பு, மங்காத்தா, சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

இதனிடையே சில வருடம் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த நடிகை திரிஷா பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கினார் .

ரீ எண்ட்ரி மூலம் மார்க்கெட் பிடித்த திரிஷா:

2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் சேர்ந்து 96 திரைப்படத்தில் நடித்து மிகப் பெரிய அளவில் ரீ என்ட்ரி கொடுத்து மாபெரும் வெற்றி கொடுத்தார் திரிஷா.

தொடர்ந்து பேட்ட, பொன்னியின் செல்வன் , ராங்கி, லியோ உள்ளிட்ட அடுத்தடுத்து திரைப்படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

தற்போது மார்க்கெட்டின் உச்ச அந்தஸ்தை பிடித்த நட்சத்திர நடிகையாக இருந்து வருகிறார். இப்படியான சமயத்தில் நடிகர் திரிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அதில் நடிகை திரிஷாவிடம் ஆங்கர் சில நட்சத்திர நடிகர்களின் பெயரை சொல்லி அவர்களுக்கு எவ்வளவு மதிப்பெண் நீங்கள் கொடுப்பீர்கள் என கேட்டதற்கு, நடிகை திரிஷா….

சிம்புவுக்கு 90 மார்க், சித்தாரத்துக்கு 50 மார்க், நடிகர் ஜெயம் ரவிக்கு 90 மார்க், தளபதி விஜய்க்கு 20 மார்க் என்ன பதில் கொடுத்தார் .

அந்த விஷயத்தில் சிம்புவை விட விஜய் கம்மி:

மேலும் ஜெயம் ரவி குறித்து பேசிய அவர் நானும் ஜெயம் ரவியும் நட்பு என்பதை தாண்டி மிகச்சிறந்த சகோதரர்… நானும் ஜெயம் ரவியின் மனைவியும் மிகவும் நெருக்கமாக பழகி க்ளோஸ் ஆக இருக்கிறோம்.

அதனால் எனக்கு ஜெயம் ரவியை மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நெருக்கமானவர் என்னுடைய அண்ணன் மாதிரி அவர் எனக்கூறி ஜெயம் ரவியை பற்றி பெருமையாக பேசினார் நடிகை திரிஷா.

ஜெயம் ரவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரத்தில் திரிஷாவுடன் நெருங்கி பழகியது தான் காரணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் திரிஷாவின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும், விஜய்க்கு வெறும் 20 மதிப்பெண்கள் மட்டும் கொடுத்திருக்கும் நடிகை திரிஷா சிம்புவுக்கு 90 மதிப்பெண்கள் கொடுத்திருப்பது விஜய் ரசிகர்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. இந்த பேட்டி வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version