அரசியல் கட்சியில் இணைகிறார் நடிகை திரிஷா..! – எந்த கட்சியில் தெரியுமா..?

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா தற்போது அரசியல் களத்திலும் இறங்க இருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அவ்வப்போது பிரபல நடிகைகள் குறித்து அந்த அரசியல் கட்சியில் இணைக்க போகிறார்.. இந்த அரசியல் கட்சியில் இணையப் போகிறார்.. என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது நடிகை திரிஷா அரசியல் பிரவேசம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 40 வயதை நெருங்கி விட்ட நடிகை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

மேலும் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவே தன்னிடம் இல்லை என்ற சுதந்திர பறவையாக பறந்து வருகிறார் நடிகை திரிஷா. மேலும் தன்னுடைய எஞ்சி இருக்கும் காலத்தை பொது வாழ்க்கையில் கழிப்பது என்ற ஆலோசனையில் இப்போது ஈடுபட்டு வருகிறாராம்.

இதனால் ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்து அதில் எனக்கு தொடங்கலாம் என்ற முடிவிலும் இருக்கிறார் நடிகை திரிஷா என்று கூறப்படுகிறது. நடிகர் விஜயின் ஆலோசனையின் பெயரில் நடிகை திரிஷா இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்ற தகவல்களை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் திடீரென அதனுடைய திருமணம் நின்று போனதால் மிகுந்த மனவேதனையில் இருக்கும் நடக்க த்ரிஷா திருமணம் என்ற பேச்சை கேட்டாலே அஞ்சுகிறாராம்.

எனவே வாழ்க்கையில் இனி திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற முடிவில் இருக்கும் நடிகை திரிஷா எஞ்சியிருக்கும் நாட்களை பொது நலனுக்காக செலவிடுவது என்ற முடிவில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பலதரப்பட்ட பொதுநல மற்றும் தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து நிதியுதவி மற்றும் தன்னால் முடிந்த கட்டமைப்பு உதவிகளை செய்து வருகிறார் நடிகை திரிஷா என்பது அவரை பின்தொடரக்கூடிய அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமம் ஒன்றுக்கு சென்றிருந்த நடிகை திரிஷா அங்கு குடியிருந்த அனைவருக்கும் தன்னுடைய சொந்த செலவில் தனித்தனியாக கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தொடர்ந்து தன்னுடைய அரசியல் ரீதியாக தன்னை அரசியல் களத்தில் இணைத்துக் கொண்டு பயணிப்பது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை திரிஷா. அதே சமயம் அரசியலில் இருக்கும் பொழுது வரக்கூடிய எதிர்ப்புகளை சமாளிப்பதற்கு உண்டான மனப்பக்குவத்தையும் நடிகை திரிஷா வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

அதற்காக தனி பயிற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என கூறப்படுகிறது. எனவே விரைவில் அரசியல் களத்தில் நடிகை திரிஷாவை எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார்கள்.

மறுபக்கம் காங்கிரஸ் கட்சியில் நடிகர் திரிஷா இணை இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் திரிஷாவின் நெருங்கிய தோழிகளாக இருக்கும் நடிகை குஷ்பூ நேரடியாக பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.  திரிஷாவின் நலம் விரும்பிகளான கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோர் பாஜக அனுதாபிகளாக இருக்கிறார்கள்.

ஆனால், நடிகை திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணை இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வட்டமடித்து வருகின்றது. இது குறித்து நடிகை திரிஷா என்ன பதில் கூற இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Summary in English : The news of actress Trisha’s decision to leave her career in the entertainment industry and pursue a career in politics has taken the internet by storm. With her determination to do something meaningful and make a difference in the lives of people, she has become an inspiration to many. Her decision to take up public service is being hailed as a sign of great courage and leadership. This move can pave the way for many other celebrities to follow suit and use their influence for good.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam