நடிகை திரிஷா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! கொளுத்தி போட்ட பிரபலம்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் பட்டம் பெற்று அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதே ஆண்டில் ஜோடி திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

நடிகையாக திரிஷாவின் பயணம்:

அதை அடுத்து அவருக்கு மளமளவென வாய்ப்புகள் குவிய 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார்.

முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிகையாக தென்பட்ட திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது கொடுக்கப்பட்டது.

அதை அடுத்து சாமி, ஆறு, ஆதி, கிரீடம், குருவி ,பீமா, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா , சகலகலா வல்லவன் ,பூலோகம், கொடி , மோகினி இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ரஜினி, அஜித் , கமல் , சூர்யா, விஜய், தனுஷ் என பல ஸ்டார் நடிகர்களுடன் திரிஷா நடித்திருக்கிறார் கிட்டத்தட்ட தற்போது 41 வயதாகும் திரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

நின்றுபோன திருமணம்:

இதனிடையே வருண் கிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர் ஒரு பிரபல தயாரிப்பாளர்.

ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு அந்த திருமணம் நடைபெறாமல் பாதியிலேயே நின்றுவிட்டது.

இதற்கான காரணம் திருஷா திருமணத்திற்கு பிறகு நடிக்கவே கூடாது என அவரது வீட்டில் கண்டிஷன் போட்டதாகவும் அதற்கு த்ரிஷாவும் அவரது அம்மாவும் ஒப்புக்கொள்ளாமல் இந்த திருமணத்தை பாதியில் நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

அதை எடுத்து பல வருடங்களாகியும் தற்போது 41 வயதாகிவிட்ட திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அஜித், கமல், சூர்யா, விஜய் தொடர்ச்சியாக பல ஹீரோக்களுடன் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, கமல்ஹாசன் உடன் தக் லைக் மற்றும் சிரஞ்சீவியுடன் விஷ்வந்தாரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திரிஷாவுக்கு விரைவில் திருமணம்:

திரிஷாவின் திருமணம் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அதாவது திரிஷா. தனது உறவுக்காரர் ஒருவரையே திருமணம் செய்து கொள்வதாக அவரது பெற்றோர்கள் பார்த்து முடிவு எடுத்து வைத்திருக்கிறார்களாம்.

எனவே விரைவில் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனும் பிரபல பத்திரிகையாளரான சுபைர் அறிவுத்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு தீயை காட்டு தீயாய் பரவி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆனால், மாதத்திற்கு ஒருமுறை திரிஷாவின் திருமணம் செய்தி வெளியாகிறது.

இதில் எது உண்மை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை எனக் கிண்டல் அடித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஒருவேளை இது உண்மையாக இருந்தால் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தற்போது திரிஷா தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருவதால் இது எப்படி சாத்தியம்? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனவே இது பொய்யான தகவலாக தான் இருக்கக்கூடும் என சிலர் ஆணித்தரமாக கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version