16 வயசில் இருந்தே திரிஷா இதை பண்றாங்க.. வெளிப்படையாக பேசிய உடை அலங்கார நிபுணர்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்திலிருந்து வரும் நடிகை திரிஷா ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார்.

குறிப்பாக இவர் முதன் முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்து 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடிகை திரிஷா:

அதன் மூலம் தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே ஆண்டில் ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் திரிஷா .

அதைத் தொடர்ந்து மௌனம் பேசியதே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றது .

அந்த திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது பெற்று திரிஷா கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து சாமி , அலை, கில்லி, ஆழுத எழுத்து, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மங்காத்தா, சகலகலா வல்லவன், கொடி ,மோகினி, பேட்ட, பொன்னியின் செல்வன் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்துக் கொண்டார்.

90ஸ் காலத்தில் இவரது திரைப்படம் ஆரம்பித்து 2000 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகையாக பார்க்கப்பட்டார் .

96 படத்தில் ரீ என்ட்ரி:

இதனிடையே சில ஆண்டுகள் அவர் சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். பின்னர் மீண்டும் 96 திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

திரிஷாவுக்கு அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. 96 படத்தில் ஜானு என்ற கேரக்டரில் நடித்த திரிஷாவுக்கு பெரும் புகழும் பெயரும் பெற்றுக் கொடுத்தது.

தமிழை தாண்டி தெலுங்கிலும் அவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கும் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து வைத்திருந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியதில் இருந்து திரிஷா தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனின் தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகை திரிஷா லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் பல வருடங்கள் கழித்து நடித்ததால் காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் இடம்பெற்ற லிப்லாக் காட்சி அதற்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்தது .

விஜய்யுடன் காதல் கிசுகிசு:

அத்துடன் நடிகர் விஜய் திரிஷாவுக்கு பல கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கியதாக செய்திகள் வெளியாகி இவர்களது காதல் கிசுகிசு தீயாய் பரவியது.

ஆனால், அவரோ அதை பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் வேலையில் மிக கவனமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷாவை குறித்து பேட்டி ஒன்றில் குறித்து பேசி இருக்கும் Saree Drapist திவ்யா… பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு திரிஷாவுக்கு புடவை கட்டி விட்டதே நான் தான்.

அந்தப் பிங்க் கலர் சேலையில் திரிஷாவின் புகைப்படம் மிகப் பெரிய அளவில் வைரல் ஆகியது. கடைசியாக GRT விளம்பரத்திற்காக திரிஷாவுக்கு Saree டிராப் பண்ணதும் நான்தான் என்று கூறினார்.

உடனடியாக தொகுப்பாளர் திரிஷா எப்படி உங்களிடம் மிகவும் பிரண்ட்லியா நடந்து கொள்வாரா? என கேட்டதற்கு….ஆமாம், அவங்க பயங்கர ஜாலியா இருப்பாங்க.

ஆனால், வந்த உடனே என்னுடைய அம்மாவை தான் கேட்பாங்க. திரிஷா சினிமா துறையில் அறிமுகமானதிலிருந்தே என்னுடைய அம்மா தான் அவருக்கு Saree ட்ராபிஸ்ட் ஆக வேலை பார்த்திருந்தார்.

16 வயசில் இருந்தே திரிஷா இதை பண்றாங்க:

குறிப்பாக 16… 17 வயதிலிருந்து என்னுடைய அம்மா தான் திரிஷாவுக்கு Saree கட்டி விட்டுக் கொண்டு இருக்கிறார் என்று திவ்யா கூறியிருக்கிறார்.

திரிஷாவே… அவர்களுக்கு ரெஸ்ட் விடுங்க என்று எங்க அம்மா பார்த்து சொல்வாங்க. அந்த அளவுக்கு என்னுடைய திரிஷாவின் திரை பயணத்தில் என்னுடைய அம்மா பயணித்திருக்கிறார் என கூறியிருக்கிறார் saree drapist திவ்யா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version