பிரபல நடிகரை நெருக்கமாக கட்டியணைத்தபடி திரிஷா.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

சினிமாவில் மிக அரிதாக பல காலங்களாக நடிகைகளாக வலம் வரும் முக்கிய பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகை திரிஷா. முதன்முதலாக ஜோடி திரைப்படத்தில் சும்மா வந்து போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் திரிஷா.

அதனைத் தொடர்ந்து மௌனம் பேசியதே திரைப்படத்தில்  முக்கியமான ஒரு கதாபாத்திரமாக திரிஷா அறிமுகமானார். மௌனம் பேசியதே திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் பெரிதாக வாய்ப்புகளை வாங்கி கொடுத்தது.

வரிசையாக பட வாய்ப்பு:

அதனை தொடர்ந்து அவர் நடித்து சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் உண்மையில் நடிகை திரிஷா முதன்முதலாக நடித்த திரைப்படம் லேசா லேசா திரைப்படம்தான். ஆனால் அந்த திரைப்படம் எடுக்கப்பட்டு மிக தாமதமாக வெளியானதால் அது திரிஷாவின் ஐந்தாவது திரைப்படமாக மாறியது.

இந்த விஷயத்தை திரிஷாவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் அதற்க்குப் பிறகு திரிஷா நடித்த கில்லி திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையை மாற்றி அமைத்தது. தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார் திரிஷா.

தமிழில் பல வருடங்களாக திரிஷா கதாநாயகியாகவே நடித்து வருகிறார் கிட்டத்தட்ட 20 வருடமாக பெண் நடிகைகள் கதாநாயகியாக நடித்து வருவது என்பது தமிழ் சினிமாவில் பெரிய விஷயமாகும். இந்த நிலையில்  சில வருடங்களுக்குப் பிறகு திரிஷாவிற்கு மார்க்கெட் குறைய தொடங்கியது.

மார்க்கெட் இழப்பு:

அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் அவர் அதிகமாக நடிக்காமல் இருந்து வந்தார் இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரிஷாவிற்கு ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜ ராஜ சோழனின் அக்காவான குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திரிஷா.

அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்ததை அடுத்து மீண்டும் அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கின. அதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

கமல்ஹாசனுடன் படம்:

மீண்டும் பிரபல நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து வரும் திரிஷா தற்சமயம் தக் லைஃப்திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனோடு நடித்து வருகிறார். இதற்கு நடுவே நடிகர் கமலஹாசனுடன் நெருக்கமாக இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியது.

அதில் கமல்ஹாசனை கட்டி அணைத்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் திரிஷா. இந்த புகைப்படம்தான் இப்போது பேசு பொருளாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version