திரிஷா 25 லட்சம் கேட்டது உண்மையா..? சம்பவத்தை நினைவூட்டி.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

அன்று முதல் இன்று வரை சில படங்களில் ஒன்றாக நடிகர், நடிகையர் நடித்துவிட்டால் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக கிசுகிசுப்பதுதான் வழக்கம்.

இது சினிமாவில் மட்டுமல்ல, இப்போது சீரியல்களிலும் தொடர்கிறது. சில நடிகர், நடிகைகளுக்குள் அப்படி ஒரு ரிலேஷன்ஷிப் உருவாகுவதும் உண்மைதான் என்பதை மறுக்க முடியாது.

உதாரணமாக ஜெய் – அஞ்சலி, ஜெய் – வாணி போஜன், பாவனி – அமீர் போன்ற பல ஜோடிகளை சொல்ல முடியும். இதில் வெளிப்படையாகவே இருந்தது கமல் – கவுதமி ஜோடிதான். ஒரே வீட்டில் லிவிங் டு ரிலேஷன்சிப்பில் வாழ்ந்து காட்டினர்.

புது விவகாரம்

ஆனால் இப்போது புது விவகாரம் ஒன்று வெடித்திருக்கிறது. நடிகை திரிஷா குறித்து அந்த அவதூறு விஷயத்தில், நடிகர் கருணாஸ் பெயரும் அடிபடுகிறது.

அதாவது ஜெயலலிதா மறைந்த சமயத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சி தாவி விடக்கூடாது என்பதற்காக கூவத்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர்

அப்போது அங்கு இருந்த எம்எல்ஏக்களுக்கு சகல தரப்பு வசதிகளும், ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு மதுபான வகைகளுடன் 3 வேளையும் அசைவ விருந்து பரிமாறி, அவர்கள் உபசரிக்கப்பட்டனர்.

அப்போது நடந்த ஒரு சம்பவமாக, முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் ஏவி ராஜூ என்பவர், நேற்று ஒரு விவகாரத்தை கிளப்பி இருந்தார்.

அதாவது, அங்கு இருந்த எம்எல்ஏக்களின் உல்லாசத்துக்காக பெண்களை ஏற்பாடு செய்ததாக கூறியிருக்கிறார்.

திரிஷா வேண்டும்

அதிலும் வெங்கடாசலம் என்ற எம்எல்ஏ, தனக்கு திரிஷா வேண்டும் என்று அடம்பிடித்ததாகவும், அதன்பிறகு அப்போதைய அதிமுக எம்எல்ஏ வாக இருந்த கருணாஸ் மூலம், ரூ. 25 லட்சம் தொகை கொடுத்து, திரிஷா அங்கு வரவழைக்கப்பட்டதாகவும் ஏவி ராஜூ கூறியிருந்தார்.

இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கோலிவுட் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பை, கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

அதிமுக தரப்பில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி, அந்த அதிமுக நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கி, நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக அந்த நிர்வாகியும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மற்றும் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், திருமணமாகாத பெண் திரிஷா மீது இப்படி ஒரு அபாண்டமாக பழி சுமத்தப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கண்டிக்கத்தக்கது

அதேபோல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் கருணாஸ் மீதும், திரிஷாவை அவர்தான் பணம் கொடுத்து அழைத்து வந்ததாக பழி சுமத்தி கூறியிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

சம்பந்தப்பட்ட அந்த அதிமுக நிர்வாகி மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால், நாளை யார் வேண்டுமானாலும் இப்படிப்பட்ட விஷயங்களை பகிரங்கமாக பேச ஆரம்பித்து விடுவர்.

உண்மையில் ,நடந்தது என்ன

உண்மையில் அங்கு நடந்தது என்ன, அதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளதா, 25 லட்சம் கேட்கப்பட்டதா என்ற விஷயங்கள் அனைத்தும் பொய் என்னும் பட்சத்தில், சட்டப்படியான நடவடிக்கைகளை திரிஷா தரப்பில் இருந்து துவங்க வேண்டும்.

இதுபோன்ற அவதூறு பேசும் நபர்களை சும்மா விடக்கூடாது. நானும் சினிமாத்துறை சார்ந்தவன் என்பதால், இதை வலியுறுத்துகிேறன் என்று கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version