முன்னணி நடிகருக்கு ஜோடியாவதில்.. நயன் திரிஷா குடுமிபிடி சண்டை..! – எங்க போய் முடிய போகுதோ..!

திரிஷா, இப்போது டாப் லெவலில் பேசப்படும் நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமாவுக்குள் வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் இளமையும், அழகும் குறையாமல், எடை அதிகரிக்காமல் அழகான இளம் நடிகைகளுக்கு போட்டியாக திரிஷா இப்போதும் இருக்கிறார்.

அதுவும், 96 படத்துக்கு பிறகு, திரிஷாவின் மார்கெட் எகிறத் துவங்கியது. இப்போது, பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு, அம்மணியின் சம்பளமும் இரட்டிப்பாக மாறி விட்டது. இமேஜூம் தாறுமாறாக எகிறி விட்டது. அடுத்த வாரத்தில், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகிற நிலையில், திரிஷா இன்னும் அதிகளவில் கவனிக்கப்படுவார். இன்னும் இமேஜ் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Trisha

திரிஷாவுக்கு போட்டியாக இருப்பவர் நயன்தாரா. இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே மறைமுகமாக போட்டி இருந்து வருகிறது. இப்போது, திருமணமான நிலையில், ஜவான் என்ற இந்தி படத்தில், ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இது அட்லி இயக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பது உறுதியாகி உள்ளது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 ம் பாகத்தில் நடித்துவரும் கமல்ஹாசன், அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். நாயகன் படத்துக்கு பிறகு இருவரும் ஒன்றுசேரும் படம் என்பதால், அதிக எதிர்பார்ப்பு இப்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது.

Trisha

மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிக்கும் இந்த புதிய படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற கேள்வி, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒருமுறை, மேடையில் பேசிய நயன்தாரா, மணிரத்னம் சார் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வேண்டும் என, நேரடியாகவே தனது விருப்பத்தை சொல்லி இருந்தார். அதேவேளையில், இதுவரை நயன்தாரா கமலுக்கு ஜோடியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

Nayanthara

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் திரிஷா, கமலுக்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஏனெனில், நயன்தாரா திருமணமானவர். திரிஷா, இன்னும் திருமணம் ஆகாதவர். அதுமட்டுமின்றி ஏற்கனவே திரிஷா, கமலுக்கு ஜோடியாக மன்மதன் அம்பு என்ற படத்தில் நடித்துள்ளார். இருவருக்கும் அந்த படத்தில் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருந்ததாக, ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் படத்தில் குந்ததவை கேரக்டரில் திரிஷா நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. மேலும், படத்தின் மாபெரும் வெற்றிக்கு திரிஷாவின் பங்களிப்பும் மிகவும் உதவியாக இருந்தது. எனவே, அந்த வகையிலும் திரிஷா கமலுக்கு ஜோடியாக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Nayanthara

நயன்தாரா – திரிஷா என இரு நாயகிகளில் கமல்ஹாசனின் ஆதரவு, திரிஷாவுக்கு இருக்கலாம் என, ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. ஆனால், வர்த்தக ரீதியாக நயன்தாராவை, கமலுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மணிரத்னம் விரும்பவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Nayanthara

மணிரத்னத்தை பொருத்தவரை, படம் சார்ந்த அனைத்து இறுதி முடிவுகளுமே, படத்தின் இயக்குநர் என்ற வகையில் அவர் கையில்தான் உள்ளது என்பதால், கமலுக்கு ஜோடியாக நடிக்க போவது நயன்தாராவா? திரிஷா வா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …