இதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை…! – ஓப்பனாக கூறிய நடிகை திரிஷா..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகை திரிஷா தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். கடந்த 2002ஆம் ஆண்டு மவுனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா.

தொடர்ந்து இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. நடிகை திரிஷாவுடன் அறிமுகமான நடிகைகள் பலரும் எங்கே போனார்கள் என்று கூட தெரியாமல் போய்விட்ட நிலையில் தற்போது நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் வளர்ந்து வந்திருக்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ..? அதே தோற்றத்துடன், கட்டு குலையாமல் இருக்கிறார் நடிகை திரிஷா. பெரிதாக எந்த மாற்றமும் இவருடைய அழகில் இல்லை. இளம் வயதில் பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவின் அழகை கண்டு ரசிக்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை திரிஷா.

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகை திரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இந்த திருமணம் நிச்சயதார்த்ததோடு நின்றுவிட்டது.

திருமணம் கைவிடப்பட்டதாக அறிவித்தார் நடிகை திரிஷா. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் நடிகை திரிஷாவின் திருமணம் குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பின.

அதில் பேசிய நடிகை திரிஷா என்னிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. ஒருவருடன் பழகும் போது இவருடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம் என்று எனக்கு தோன்ற வேண்டும்.

ஏனென்றால் திருமணம் செய்துவிட்டு விவாகரத்துச் செய்வதில் எனக்கு உடன்படிக்கை இல்லை. அது மகிழ்ச்சியான வாழ்க்கையும் இருக்காது என நம்புகிறேன். எனவே அவசரப்பட்டு திருமணம் செய்து விட்டு பிறகு விவாகரத்து செய்துவிட்டு வாழும் வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இல்லை.

அதனால், எனக்கு யார் மீது நம்பிக்கை வருகிறதோ..? யாரை பார்க்கும் போது இவருடன் வாழ்நாள் முழுதும் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் தோன்றுகிறதோ..? அவருக்கும் என்னை பிடித்திருக்கும் போது நான் திருமணம் செய்துகொள்வேன் என்று தன்னுடைய பதிலை கூறியிருக்கிறார் நடிகை திரிஷா

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …