துளி மேக்கப் இல்லாமல் நடிகை திரிஷா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். அதுவும் 20 ஆண்டுகளாக நாயகியாக அவர் நீடித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில் திரிஷா தமிழ் சினிமாவுக்குள் வந்த காலகட்டத்தில் வந்தபல நடிகைகள் இப்போது, அம்மாவாக, அக்காவாக நடித்துக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் சிலர் சீரியல்களில் மாமியார் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

திரிஷா

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சியான் விக்ரம், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த திரிஷா, தெலுங்கு படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார். மலையாளம் மற்றும் கன்னடம் படங்களில் திறமை காட்டி இருக்கிறார்.

நடிகர் விஜயுடன் திரிஷா நடித்த கில்லி, திருப்பாச்சி, லியோ படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் ஆதி, குருவி போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை. எனினும் லியோ படத்தில் விஜயுடன் லிப்லாக் காட்சியில் நடித்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.

விஜயுடன் குத்தாட்டம்

அதுமட்டுமின்றி இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் அவரது 68வது படமான த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில், ஒரு பாடலுக்கு மட்டும் வந்து திரிஷா குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

இந்த ஐயிட்டம் பாடலுக்கு ஆட, சம்பளம் கூட வேண்டாம் என மறுத்திருக்கிறார் திரிஷா. விஜய் படம் என்றால் கேமியோ ரோலில் நடிப்பது கூட மிகப்பெரிய சந்தோஷம் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: பெற்ற தாயிடமே சில்க் ஸ்மிதா இதை செய்தார்.. மிகப்பெரிய தவறு.. உடம்பு கூசும் ரகசியம் உடைத்த கவர்ச்சி நடிகை..

கொள்கையை காற்றில் பறக்க விட்டுள்ளார்

ஆனால் 96 படத்துக்கு முன்பு, மார்க்கெட் டல் ஆன நிலையில், சினிமாவில் நடிக்க வாய்ப்புகளே இல்லாத போது கூட இப்படி குத்தாட்டம் போட பலமுறை அழைத்தும், பல பெரிய இயக்குனர்கள், ஹீரோக்கள் படங்களில் குத்தாட்டம் போட மறுத்தவர்தான் திரிஷா. ஆனால் விஜய் படம் என்றவுடன் தனது கொள்கையை காற்றில் பறக்க விட்டுள்ளார்.

குந்தவை கேரக்டரில்

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு, திரிஷாவின் மார்க்கெட் இப்போது வேற லெவலில் இருக்கிறது. தமிழில் தக்லைப், விடாமுயற்சி ஆகிய படங்கள், தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் நடிக்கும் படங்கள் உட்பட 3 படங்கள், மலையாளத்தில் 2 முக்கிய படங்கள் என இப்போதைக்கு 7 படங்கள் கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார் திரிஷா.

இதுதவிர இந்தியில் நடிகர் சல்மான்கானுடன் திரிஷா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்: தனக்காக 20க்கும் மேற்பட்டவர்கள் அந்த உறுப்பை இப்படி செய்தார்கள்.. குண்டை தூக்கி போட்ட ஷகீலா..

கண்மணி அன்போடு

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சிறிது கூட மேக்கப் இல்லாமல் காருக்குள் அமர்ந்திருக்கும் திரிஷா, கண்மணி அன்போடு காதலன் பாடலுக்கு தலை முடியை முன்னால் தூக்கிப் போட்டு மெல்ல சிரித்தபடி ரியாக்சன் காட்டுகிறது. அது இப்போது செம வைரலாகி வருகிறது.

மேக்கப் இல்லாமல்

ஆனால் இந்த வீடியோவில் சிறிது கூட மேக்கப் இல்லாமல் இத்தனை அழகாக 40 வயது கடந்தும் திரிஷா ஜொலிக்கிறாரே என அதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜொள்ளுவிடுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version