நயன்தாரா சொன்னது உண்மையா..? திரிஷா நச் பதில்..!

கேரளத்து பேரழகியான நயந்தாரா ரசிகர்களின் மனதில் தனக்கு என்று இடம் பிடித்துக் கொண்டவர். ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடிக்க இவருக்கு தமிழில் சரத்குமார் ஒரு இணைந்து ஐயா திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட நயந்தாரா தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும்  களல கட்டி வருகின்ற நேரத்தில் இவருக்கு போட்டியாக நடிகை திரிஷாவை சொல்லலாம்.

எவர்கிரீன் நடிகையாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது 9-க்கு போட்டியாக 3 என்று சொல்லக்கூடிய வகையில் உயர்ந்திருக்கிறார்.

நயன்தாரா மற்றும் திரிஷா..

நயன்தாரா மற்றும் திரிஷா இருவரும் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தளபதி விஜய், தல அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு  பல படங்களில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர்கள்.

இவர்கள் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் பலமும் மாஸ் ஹிட் ஆனதை அடுத்து அடுக்கடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் அண்மையில் திரிஷா நடிப்பில் வெளி வந்த வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கேரக்டரை செய்து அனைவரும் மனதிலும் இடம் பிடித்தார்.

 இதனை அடுத்து இவருக்கு கில்லி திரைப்படத்தை அடுத்து தளபதி விஜய் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் லிப் லாக் கிஸ் அடித்து ரசிகர்களை திணற வைத்தார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கில்லி படத்தில் இருந்த அதே கெமிஸ்ட்ரி லியோ படத்திலும் ஒர்க் அவுட் ஆகி இருந்ததாக கூறியிருந்தார்கள்.

நயன் சொன்னது உண்மையா..?

 நடிகை நயன்தாரா பாலிவுட் திரைப்படங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்த இவர் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஒரு இணைந்து நடித்து மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து ஹிந்தி படங்களில் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படமானது கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் திரிஷா மற்றும் நயன்தாரா இருவருமே தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர்கள் அடிக்கடி புகைப்படங்களில் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் பேட்டிகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுவார்கள்.

அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் திரிஷா பேசியிருக்கும் பேச்சானது நயன்தாரா சொன்னது உண்மை தானா? என்ற கேள்விக்கு செமத்தியான பதிலை தந்திருக்கிறார்.

அப்படி என்ன நயன்தாரா கேட்டிருக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம். பொதுவாகவே பெண்களை மையக்கருவாகக் கொண்டு எடுக்கக்கூடிய படங்களில் பல்வேறு வகைகளான சிக்கல்கள் இருப்பதாகவும் பட்ஜெட் மட்டும் அல்லாமல் பல்வேறு காரணிகளும் கஷ்டங்களும் உள்ளது என்பதை எதார்த்தமாக கூறியிருந்தார்.

திரிஷா நச் பதில்..

இந்த விஷயத்தை பற்றி திரிஷாவிடம் கேள்வி எழுப்ப அவர்  ராங்கி படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை  மிகவும் தெளிவாக கூறியிருந்தார். பொதுவாகவே வெளிநாடுகளில் படப்பிடிப்பு எடுக்கச் சென்றால் பட்ஜெட் போடுவதோடு மட்டுமல்லாமல் அங்கு ஒரு முறை மட்டுமே படப்பிடிப்பு செய்யப்பட்டு எடிட் செய்யப்படும்.

எனினும் ராங்கி திரைப்படத்தை பொருத்த வரை படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக உஸ்பெக்கிஸ்தானில் மறுமுறை ஷூட்டிங் செய்து எடிட்டிங் எல்லாவற்றையும் சரி செய்து மீண்டும் ஷூட்டிங் செய்வது எனக்கு ஞாபகம் உள்ளது. இதன் மூலம் அந்த படம் மிகச் சிறப்பாக  வரும் என்று எதிர்பார்த்தார்கள்.

அது மட்டுமல்லாமல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களுக்கு எப்போதும் பட்ஜெட் கன்சிஸ்டெண்சி இருக்கும் அதை மறுக்க முடியாது. 

எனவே நயன்தாரா சொன்னது போல பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற படங்களுக்கு பட்ஜெட் மட்டும் அல்லாமல் மார்க்கெட் வகையிலும் சில வகையான சிக்கல்கள் எடுப்பது உண்மை தான் என்பது போல திரிஷாவும் பதில் கூறியிருப்பது இணையங்களில் தற்போது வைரலாக பேசும்  பொருளாக மாறிவிட்டது. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version