இது தான் விஜய்யிடம் எனக்கு பிடிக்காத ஒரே விஷயம்.. நடிகை திரிஷா தாக்கு..!

தமிழ் திரைப்படத்தின் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு தளபதி விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து அசத்து இருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா லிப்லாக் காட்சியில் அசத்தல் முத்தம் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

நடிகர் விஜய்..

ஏற்கனவே இவர் நடிப்பில் வெளி வந்த கில்லி படத்திலும் நடிகை திரிஷா நடித்து இருக்கக்கூடிய விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த திரைப்படம் தற்போது ரீரீலிஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகின்ற திரைப்படமாக மாறி புது படத்தை போல் வசூலை குவித்து உள்ளது.

அடுத்து நடிகர் விஜய்க்கு நடிகை திரிஷாவிக்கும் இடையே இருக்கின்ற கெமிஸ்ட்ரியை பற்றி அவர்களது ரசிகர்கள் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் விஜய் குறித்து திரிஷா பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அட திரிஷா எப்படி இப்படி ஓப்பனாக சொன்னாங்க என்று பல்வேறு வகைகளில் கமெண்ட் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவை பொறுத்த வரை மிகச் சிறந்த ஜோடிகளாக திகழ்ந்த விஜயும் திரிஷாவும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

குருவி படத்தை அடுத்து மற்ற படங்களான கில்லி, திருப்பாச்சி, ஆதி போன்ற படங்கள் மிகச் சிறப்பான வசூல் ரீதியான வெற்றியை தந்தது. கில்லி படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

எனக்கு பிடிக்காத ஒரே விஷயம்..

இந்த சூழ்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லியோ படத்தில் ஜோடி சேர்ந்து தங்களது ரியல் ஹமிஸ்ரியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த படத்தில் இவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருந்தது.

மேலும் லியோ படத்தில் இருவரும் நடிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து டேட்டிங் ஒன்றாக சென்றதாக சொல்லப்பட்ட நிலையில் வெளிநாட்டில் ஒரு ஷாப்பிங் மாலில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்து பின்னர் அவை அனைத்தும் வதந்தி என்பது தெரிய வந்தது.

நடிகை திரிஷா தாக்கு..

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சஷூட்டிங் முடிந்த பிறகு தளபதி விஜய் என்ன செய்வார் என்பதை ஓபன் ஆக திரிஷா தெரிவித்து இருக்கும் விஷயம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ஷூட்டிங் முடிந்துவிட்டால் ஒரு சேரை எடுத்துப் போட்டுக் கொண்டு சுவருக்கு பக்கத்தில் அமர்ந்து அந்த சுவற்றை பார்த்துக் கொண்டிருப்பார். சில சமயம் அமைதியாக இருப்பதைப் பார்த்தால் நாம் தான் தவறு செய்து விட்டோமோ என நினைக்கத் தோன்றும்.

இது மாதிரியான அமைதி எனக்கு சுத்தமாகவே பிடிக்காது என்ற விஷயத்தை ஓபன் ஆக தெரிவித்ததை அடுத்து ரசிகர்கள் இதை பேசும் பொருளாக இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

விஜயின் இந்த அமைதியை பற்றி அறிந்து கொண்ட ரசிகர்கள் இனி வரும் காலங்களில் அரசியலில் இறங்கப் போகும் இவர் இது போன்று அமைதி காப்பதின் மூலம் வெற்றியை பெறுவாரா என்ற வகையில் அவர்களுக்குள் பேசி வருவது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version