முரட்டு சிங்கிள்ஸ் கூட்டணி மீண்டும் மிரட்டும் வில்லியாக திரிஷா – அசத்தல் அப்டேட்ஸ்..

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பெற்று இருக்கும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் அண்மையில் தான் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து சிக்ஸர்களை விளாசி வருகிறார். அந்த வகையில் மணிரத்தினம் இயக்கி வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பகுதியில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் குந்தவையாகவே வாழ்ந்து விட்டார்.

நடிகை திரிஷா..

சென்னை அழகியாக 1999 -ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட இவர் ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். அனுராதிகா என்ற இயற்பெயரை கொண்ட இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக பெயரை திரிஷா என்று மாற்றிக்கொண்டார்.

1999-ஆம் ஆண்டு ஜோடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2002-இல் வெளி வந்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வகையில் லேசா லேசா, கில்லி, ஆறு, கிரீடம், பீமா, குருவி, அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, அரண்மனை 2, பேட்ட போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் எவர்கிரீன் நடிகையாக விளங்குகிறார்.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து இருக்கக்கூடிய இவர் சர்ச்சைக்கு உரிய இயக்குனரின் திரைப்படத்தில் வில்லியாக நடிக்க இருப்பதாக இணைய முழுவதும் செய்திகள் வெளி வந்துள்ளது.

முரட்டு சிங்கிள் கூட்டணியில்..

40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கக்கூடிய திரிஷா, தன்னை போலவே திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் 44 வயது பேச்சுலர் நடிகர் பிரபாஸோடு ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாகத்தான் விஷயங்கள் வெளி வந்துள்ளது.

ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து வருஷம் என்கின்ற சூப்பர் டூப்பர் ஹிட் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றதை அடுத்து மீண்டும் இணைய இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் ஜோடி போட்டு நடிக்கக்கூடிய இந்த படத்தை சந்திப் ரெட்டி வங்கா இயக்க இருப்பதாகவும் படத்திற்கு ஸ்பிரிட் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா கூறியிருக்கிறார்.

அசத்தல் அப்டேட்ஸ்..

இதனை அடுத்து இந்த படத்தின் அசத்தல் அப்டேட்ஸ் தற்போது இணையங்களில் பரவி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதற்கு காரணம் சர்ச்சை இயக்குனராக சித்தரிக்கப்படும் இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா ஒரு வில்லத்தனமான இயக்குனர் இவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் ஆகிய இரண்டு படங்களுமே சர்ச்சையில் சிக்கியது.

இதில் குறிப்பாக அனிமல் படத்தில் இவர் பெண்களை இழிவு படுத்தியதாக சர்ச்சைகள் இழந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இந்நிலையில் அந்தப் படத்தை ஆகா ஓகோ என்று திரிஷா பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து இவர் தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் வில்லியாக நடிக்க இருக்கக்கூடிய விஷயம் வெளிவந்ததை அடுத்து இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோ வில்லன் மேலும் இதில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அதில் வில்லன் பிரபாஸுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

ஏற்கனவே தமிழில் தனுஷின் கொடி படத்தில் வில்லியாக வந்து மிரட்டிய திரிஷா தற்போது மீண்டும் பிரபாஸோடு இணைந்து வில்லியாக நடிக்க கூடிய தகவல்கள் இந்தியா முழுவதுமே ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version