என்னது இந்த காமெடியன் ஹீரோவா..? ராஜமௌலியின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை ரிஜெக்ட் செய்த திரிஷா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பக்குவமாக நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொண்ட நடிகை திரிஷா என்றும் எவர்கீரின் நடிகையாக மக்கள் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார்.

மேலும் திரை உலகில் ஹீரோயினிகள் வந்த வேகத்திலேயே காணாமல் போகக்கூடிய நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் கில்லி படத்தை அடுத்து லியோ படத்தில் தளபதியோடு இணைந்து நடித்து அனைவரையும் மகிழ்வித்தார்.

நடிகை திரிஷா..

இதற்குக் காரணம் இவர் அண்மையில் வெளி வந்த வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிக்ஸர்களை விளாசித் தள்ள ஆரம்பித்து விட்டார்.

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தான் லியோ, விடாமுயற்சி, தக் லைப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரக்கூடிய இவர் டாப் நடிகையாக இருக்கும் லேடிஸ் சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் திரிஷா குறித்து அண்மையில் ஒரு தகவல் வெளி வந்து ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்குக் காரணம் ஆரம்ப காலத்தில் திரை உலகில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து அதனை அடுத்து சூர்யாவின் மௌனம் பேசுதே படத்தின் மூலம் ஹீரோயினியாக நடித்த இவர் ராஜ மவுலியின் திரைப்படத்தில் நடிக்க நோ சொல்லிவிட்டாராம்.

இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? தமிழ் திரையுலகை பொருத்த வரை அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா, சூர்யா என பலர் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்ட திரிஷா ஏன் ராஜமவுலி படத்தில் அந்த காமெடி ஹீரோவோடு நடிக்கவில்லை தெரியுமா?

என்னது இந்த காமெடியன் ஹீரோவா..

தனது இரண்டாவது இன்னிங்ஸில் களை கட்டி வரும் நடிகை திரிஷா இடையில் சில சறுக்கல்களை சந்தித்து இருந்தாலும் தன் விடாமுயற்சியால் தொடர்ந்து நடித்ததை அடுத்து இன்று கம்பேக் கொடுத்து இருக்கிறார்.

இன்றும் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்து இருந்தாலும் மறுபக்கம் ஹீரோயின் நிமித்தமான கதை கரு நிறைந்த படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த வகையில் வெளி வந்த ராங்கி திரைப்படம் இவருக்கு கலவை ரீதியான விமர்சனத்தை பெற்று தந்தது.

ராஜமவுலி படத்தை ரிஜெக்ட் செய்த திரிஷா..

தற்போது இவர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகி இருப்பதோடு மட்டுமல்லாமல், ஹிந்தி படம் ஒன்றிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் 2010-ஆம் ஆண்டு ராஜமவுலி காமெடி ஆக்டர் சுனிலை வைத்து இயக்கிய மர்யதா ராமண்ணா படத்தில் ஹீரோயினியாக திரிஷாவை நடிக்க அணுகி இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷா காமெடி நடிகர்களுக்கெல்லாம் நான் ஹீரோயினியாக நடிக்க முடியாது என ஓப்பனாக சொல்லி அந்த ப்ராஜெக்டை ரிஜெக்ட் செய்து விட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் மெகா ப்ளாக் பஸ்டர் படமாக மாறியது.

இதனால் அந்தப் படத்தில் நடிக்காமல் தவறிவிட்டதை நினைத்து திரிஷா இன்றும் பீல் செய்து வருவதாக சில விஷயங்கள் இணையம் முழுவதும் கசிந்து வருவதை அடுத்து ரசிகர்கள் அந்த விஷயத்தை நண்பர்களோடு ஷேர் செய்து இணையத்தில் வைரலான விஷயமாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version