இவருக்கெல்லாம் ஹீரோயினாக முடியாது..! ராஜமௌலி கேட்டும் மறுத்த நடிகை திரிஷா..!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. லேடி சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக இவர் இருக்கிறார் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.

அதற்கு ஏற்றது போல் தற்போது லேடி சூப்பர் ஸ்டாருக்கு கிடைக்காத அளவு திரைப்படங்கள் இவரின் கைவசம் இருப்பதாலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து வருவதாலும் முதல் இடத்திற்கு வந்து விட்டாரா? என்ற கேள்வியை கேட்க வைத்துள்ளது.

இவருக்கெல்லாம் ஹீரோயினியாக முடியாது..

திரை உலகில் ஆரம்ப காலத்தில் இருந்து தனக்கு என்று ஒரு தனி பாணியை வகுத்து அதில் பயணம் செய்து வந்த நடிகை திரிஷா என்றும் எவர்கீரின் நடிகையாக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இவர் தற்போது சிக்ஸர்களாக விளாசித் தள்ளி வருகிறார். அந்த வகையில் எப்போதுமே சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் மார்க்கெட் இருக்கும்.

அப்படி மார்க்கெட் இறங்கும் சமயத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார்கள். அப்படி இல்லை என்றால் சின்னத்திரை சீரியல்கள் என கலை கட்டி நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

திரிஷாவை பொறுத்த வரை பல ஆண்டுகளாக திரையுலகில் நின்று நிலைத்து தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் இவரிடம் ஒரு காலத்தில் தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி படத்தில் நடிக்க கேட்க மறுத்திருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ராஜமௌலி கேட்டும்..

அந்த வகையில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி இயக்கிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை தந்திருப்பதோடு இவர் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் உச்சகட்ட அந்தஸ்து கிடைத்துள்ளது.

அப்படிப்பட்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் காமெடி நடிகர் சுனில் நடித்த மரியாதை ராமண்ணா படத்தில் திரிஷாவை ஹீரோயினியாக நடிக்க அணுகி இருக்கிறார்கள்.

அப்போது திரிஷா காமெடி நடிகர் என காரணம் காட்டி அந்த படத்தில் நடிக்க மறுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ராஜமவுலி படத்தில் நடிக்க மறுத்த திரிஷா பற்றி பேசி வருகிறார்கள்.

மறுத்த நடிகை திரிஷா..

தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க மறுத்ததற்கு காரணம் என்ன என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவருக்காக ஆவது நடித்திருக்கலாமே என்று அட்வைஸ் பண்ணி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். வேறு சில ரசிகர்களும் அவர் பல படங்களில் நடித்திருப்பதால் கால்ஷீட் இல்லாமல் இருந்திருக்கும் என்று நினைத்தது தவறாகி விட்டதே என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version