திரிஷா-வின் வாழ்க்கையை சீரழித்த இயக்குனர்..! – என்ன கொடுமை இது..?

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை திரிஷா ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அதன்பிறகு திரைப்படங்களில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.

குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விஜய் அஜித் சூர்யா விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார் நடிகை திரிஷா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் கூட நடித்திருக்கிறார்.

சமீப காலமாக த்ரிஷா ஹீரோயின் சென்ட்ரிக் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தற்பொழுது அரை டஜன் படங்களுக்கு மேலாக நடித்து வரும் இவர் நடிகை நயன்தாரா அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய முன்னணி கதாபாத்திரங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் இவர் ஹீரோயின் இவர் நடித்த ஹீரோயின் சென்று படங்கள் ரிலீஸ் ஆவதிலேயே பல சிக்கல்கள் இருந்தன. ஆனாலும் தமிழ் திரை உலகில் பொருத்தவரை நடிகை நயன்தாராவுக்கு இணையான அந்தஸ்தை நடிகை திரிஷாவும் பெற்று இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் தன்னுடைய 39 வது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை திரிஷா. ஆனால் 40 வயது நெருங்கிவிட்டாலும் கூட இப்போதும் 20 வயது இளம் சீட்டு போல ஜொலிக்கிறார் அம்மணி விஜய் அஜித் விக்ரம் தனுஷ் சிம்பு என இன்றைய தலைமுறை நடிகர்களுடன் திரிஷா நடித்திருந்தாலும் கூட சமீப காலமாக த்ரிஷாவின் திரைப்பட வாழ்க்கை என்பது கொஞ்சமாக தடுமாறியது.

ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படம் அதனை மீட்டுக் கொடுத்தது என்று கூறலாம். இந்நிலையில் தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால், இயக்குனர் ஷங்கரின் படங்களில் நடிகை திரிஷா நடித்தது கிடையாது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்கு என்ன காரணம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த படத்தில் நடிகை ஜெனிலியா ஹீரோயினாக நடித்திருப்பார்.

ஆனால், ஜெனிலியா கதாபாத்திரத்திற்கு முதன்முதலாக பரிந்துரை செய்யப்பட்டவர் நடிகை யார் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் பாய்ஸ் இந்த படத்தில் நடிகர்கள் சித்தார்த், பரத், மணிகண்டன், தமன், ஜெனிலியா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருந்தாலும் கூட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல படமாக இந்த படம் அமைந்தது. இந்த திரைப்படத்தில் நடிகை ஜெனிலியா நடித்திருந்த ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் ஒரு நடிகையை நடிக்க வைப்பதற்காக இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் இந்த படத்திற்கான ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது, சென்னை கிண்டியில் நடந்து கொண்டிருந்த மிஸ் மெட்ராஸ் நிகழ்ச்சிக்கு சென்ற இவர் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்ற ஒருவரை தன்னுடைய கேமராவில் படம் பிடித்து இயக்குனர் சங்கரிடம் போட்டு காட்டி இருக்கிறார்.

அந்த வீடியோவை பொறுமையாக பார்த்த இயக்குனர் ஷங்கர்.. இந்த பெண்ணிடம் ஏதோ மிஸ் ஆகிறது.. இந்த பெண்ணிடம் ஏதோ ஒரு விஷயம் இல்லை.. வேறு நடிகை பாருங்களேன் என்று கூறியிருக்கிறார்.

ஷங்கர் நிராகரித்த அந்த நடிகை வேறு யாரும் கிடையாது சட்சாத் நடிகை திரிஷாவே தான். திரிஷாவை வீடியோவில் பார்த்துவிட்டு தான் நடிகர் ஷங்கர் இயக்குனர் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது என்று தட்டி கழித்திருக்கிறார்.

அதன் பிறகு வேறு நடிகையை அடையாளம் காண உதவி இயக்குனர்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறார். அதன்படி அலைந்து திரிந்து நடிகை ஜெனிலியாவை பாய்ஸ் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக்கி இருக்கிறார்கள். தன்னுடைய படத்தில் திரிஷாவிற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் திரிஷாவின் சினிமா வாழ்க்கையே வேற லெவலில் இருந்திருக்கும்.

இப்படி ஏதோ குறைகிறது என கூறி திரிஷாவின் சினிமா வாழ்க்கையே சீரழித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த கோபத்தினாலே அந்நியன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் நடிகை திரிஷா என்று கூறுகிறார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English :  Director Shankar’s decision to not cast actress Trisha in his upcoming movie ‘Boys’ has caused a stir in the film industry. The announcement has been met with mixed reactions from fans and critics alike. While some are of the opinion that Shankar should have given Trisha a chance, others feel that he made the right decision as she did not fit into the movie’s narrative.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …