தமிழ்த் திரையுலகில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர் திரிஷா.இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த திரிஷா இடையில் சில காலங்கள் தமிழ்ப் படங்களில் அடிக்கடி தோன்றவில்லை.
திரிஷாக்கு மார்க்கெட் அவ்ளோதான்னு நெனச்சவங்க எல்லாரும் வாயைப் பிளக்குற மாதிரி ’96’ படத்துல வேறலெவல் ரீஎன்ட்ரி கொடுத்தாங்க. அந்த படத்துல கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு எட்டாக்கனியாய் இருந்த திரிஷாவின் மீது ரசிகர்கள் அனைவருக்கும் காதல் ஏற்பட்டதுன்னு சொல்லலாம்.
அது மட்டுமில்லாம அவங்க போட்டிருந்த மஞ்சள் கலர் சுடிதார் அந்த ஆண்டு தீபாவளிக்கு அனைவராலும் தேடி விரும்பி வாங்கப்பட்டது. வயசு 39-ன்னு சொன்னா நம்ப முடியாது. அப்படி ஒரு கட்டழகு குறையாத உடம்பு. இப்போ ரீசண்டா ட்விட்டர்ல அவங்களோட புகைப்படத்தை போஸ்ட் பண்ணிருக்காங்க.போஸ்ட் பண்ண சில நொடிகளிலேயே பல லட்சம் லைக்.
ஊதா கலரு சேலையில் சும்மா மெழுகுச்சிலை மாறி இருக்காங்க. பலரும் அவங்க போட்டோவ சமூக வலைதளத்தில பகிர்ந்துட்டும் வராங்க.இப்பவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் த்ரிஷாவுக்கு அடுத்தடுத்து நிறைய படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் ‘குந்தவை’ கதாபாத்திரத்தை தனது அசர வைக்கும் அழகாலும், அசாத்திய நடிப்பினாலும் மெருகேற்றி நடித்து அவரது தனித்துவத்தை நிரூபித்துள்ளார் என்றால் மிகையாகாது.
உனக்கு 20 எனக்கு 18, கில்லி, சாமி போன்ற பல்வேறு படங்களில் அனைத்து விதமான ரசிகர்களின் கவனத்தையும் தன்வசம் ஈர்த்து இப்போதும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், உயிர் உங்களுடையது தேவி.. என்று புலம்பி வருகின்றனர்.