என்ன சொல்ட்றீங்க.. திரிஷாவை கல்யாணம் பண்ண வேண்டியவர்.. இப்போ இந்த நடிகையுடனா..?

தமிழ் சினிமாவில், சில நடிகைகள் மட்டும்தான் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடிகிறது. மற்றவர்கள் குறிப்பிட்ட காலத்தை கடக்க முடிவதில்லை. கவர்ச்சியாக நடித்தாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு அவர்களது இமேஜ் ரசிகர்கள் மத்தியில் நீடித்திருப்பதில்லை. ஆனால் சில நடிகைகள் மட்டுமே பல ஆண்டுகள் கடந்தும், சினிமாவில் கதாநாயகியாக நீடித்து வருகின்றனர்.

திரிஷா

நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நீடித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் அவர் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, பல பிரச்சனைகள் சந்தித்து அதையெல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

சாமி படத்தில் மாமியாக…

லேசா லேசா, மௌனம் பேசியதே போன்ற ஆரம்ப கால படங்களில், திரிஷா பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை ஆனால், ஹரி இயக்கத்தில் சாமி படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த பிறகு, மாமி திரிஷா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரிஷாவுக்கு, தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் குவிந்தன.

பல முக்கிய வெற்றிப் படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார். ரஜினி, கமல், விஜய், சிலம்பரசன், அஜித், விஜய் சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி என பல டாப் நடிகர்களுடன் நடித்த திரிஷா, தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார்.

கைகொடுத்த 96

ஆனால் ஒரு கட்டத்தில்,அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்து மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக, கம்பேக் ஆக அமைந்தது.

குந்தவை கேரக்டரில்

மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவை கேரக்டரில் திரிஷாவின் நடிப்பு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.

அதன் பிறகு லியோ படத்தில் நடித்த திரிஷா, இப்போது மலையாளத்தில் 2 படங்களிலும், தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்ற முன்னணி நடிகர்களுடனும் 3 படங்களிலும் என மொத்தம் 5 படங்களில் நடித்து வருகிறார்.

அது மட்டுமின்றி, மணிரத்னம் இயக்கத்தில் கம்லஹாசன் நடித்து வரும் தக்லைப்படத்திலும் திரிஷா இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.

திருமண நிச்சயதார்த்தம்

நடிகை திரிஷாவுக்கு, கடந்த பல வருடங்களுக்கு முன்பு வருண்மணியன் என்ற சினிமா தயாரிப்பாளருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் நிச்சயதார்த்தத்தோடு அது நின்று போனது. திருமணம் நடக்கவில்லை. அதற்கு காரணம், திருமணத்திற்கு பிறகு திரிஷா நடிக்க கூடாது என்று மணமகன் குடும்பத்தினர் கண்டிஷன் போட்டதுதான்.

அதன் பிறகு, திரிஷா படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி பல படங்களில் நடித்தார்.

பிந்து மாதவியுடன்

இந்நிலையில் திரிஷாவுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட வருண்மணியன், நடிகை பிந்து மாதவியுடன் காதல் கொண்டு நெருங்கி பழகி வருகிறார் என்றும், அவரும் பிந்து மாதவியும் பல இடங்களுக்கு டேட்டிங் சென்றனர் என்பதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வருண் மணியனுடன்…

ஆனால் இதுகுறித்து பேசிய நடிகை பிந்து மாதவி, திரிஷாவுடன் நடந்த நிச்சயதார்த்தம் நின்ற போனபிறகுதான், நானும் வருண்மணியனும் காதலித்தோம். பல இடங்களுக்கு டேட்டிங் சென்றோம் என்று அப்போேதே கூறியிருக்கிறார்.

என்றாலும், பிரபல நடிகையான திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட வருண்மணியனுடன் பிந்து மாதவி டேட்டிங் சென்றது இப்போது வைரலாகி வருகிறது.

என்ன சொல்றீங்க?

இதையறிந்த பலரும், என்ன சொல்றீங்க.. திரிஷாவை கல்யாணம் பண்ண வேண்டிய வருண் மணியன், இப்போது பிந்து மாதவியுடன் இருக்கிறாரா என்று அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version