தமிழ் திரையுலகுக்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் ஜொலித்து வந்த நடிகை திரிஷா, ஆரம்பத்தில் திரையுலகில் சிறு, சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இதனை அடுத்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பயணிக்க ஆரம்பித்தார்.
இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அத்துனை நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்துவிட்டு, இவர் ரசிகர்களின் கனவு கன்னி என்ற அந்தஸ்தை பெற்று பெருவாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
மேலும் இவர் திரையுலகில் பயணிக்கும் போது இடையில் பல பிரச்சனைகளை சமாளித்து தனது மார்க்கெட்டை இழந்தார். எனினும் சுதாகரித்துக் கொண்ட திரிஷா தற்போது இரண்டாவது இன்னிசில் களம் இறங்கி சிக்ஸர்களையும், பௌடரிகளையும் விளாசிகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து அசத்தியதோடு, விஜய்க்கு லிப்லாக் முத்தம் கொடுத்து ரசிகர்களின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனை அடுத்து தற்போது விக்ரம் நடிப்பில் வெளியான சாமி படத்தின் இரண்டாவது பகுதியில் திரிஷாவை நடிக்க கேட்டார்கள். ஆனால் அதற்கு திரிஷா நோ என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்திருக்கிறார்.
இதற்கு என்ன காரணம் என்றால் இந்த கேரக்டரில் திரிஷா கர்ப்பமாக இருப்பது போலவும், அம்மா கேரக்டரில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் கதை இருப்பதால் இந்த கேரக்டருக்கு அவர் மறுப்பு சொல்லிவிட்டார்.
இதனை அடுத்து விஜய் படத்தில் அம்மா கேரக்டர் ரோலுக்கு ஓகே சொன்ன இவர் தற்போது ஏன் விக்ரம் படத்தில் அது போன்ற கேரக்டர் ரோலுக்கு ஓகே சொல்ல மறுத்துவிட்டார் என்ற கேள்வி பலரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கேள்விக்கு அவர் ஏன் விஜய்க்கு ஓகே மற்றும் விக்ரமுக்கு நோ சொன்னார் என்பதை விரைவில் தெரிவிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.