யார் … யாருக்கு போட்டி? நயனை பற்றி மனம் திறந்து பேசிய திரிஷா..!

தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு நடிகைகள் தாக்குபிடித்து நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படக்கூடிய நயன்தாரா மற்றும் பொன்னியின் செல்வனின் கலக்கலாக வந்த குந்தவை பிராட்டியான திரிஷாவையும் கூறலாம்.

 இவர்கள் இருவரும் தற்போது வரை வரும் இளம் நடிகர்களுக்கு ஈடு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த நடிகைகளின் மனதில் பயத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு படு பிஸியாக தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்கள்.

 இந்த சூழ்நிலையில் நயன்தாராவுடன் திரிஷாவை ரசிகர்கள் ஒப்பிட்டு பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் யார் அதிக போட்டியாளராக இருக்கிறார் என்ற உணர்வை தூண்டி விட்டிருக்கக் கூடிய நிலையில் தற்போது அந்த கேள்விக்கு திரிஷா மனம் திறந்து பதிலளித்திருக்கிறார்.

 இந்த பதிலில் அவர் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுப் பேசுவதை வரவேற்று இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இருவரும் ஒரே காலகட்டத்தில்  தான் நடிப்பதை துவங்கியிருக்கிறார்கள். அது போலவே பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்கள் அவர்களின் விருப்பத்துக்கு தக்கவாறு அவர்கள் விரும்பும் நடிகைகளை தேர்வு செய்கிறார்கள். இதில் எந்த நடிகை தான் உயர்ந்தவர் எந்த நடிகை தான் தாழ்ந்தவர் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. அதைத்தானும் விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் தான் விரும்பும் நடிகைகளின் சிறப்பு இயல்புகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 இவருக்கும் நயன்தாராவுக்கும் அதிக அளவு தொடர்பு இல்லை. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பதற்கு முதலில் நான் தான் ஒப்பந்தமானேன் ஆனால் அந்த படத்தை நடிக்க விரும்பவில்லை என்பதால் விலகி விட்டேன் என்று திரிஷா தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் யார் யாருக்கு போட்டியாளர் என்ற நிலையை விடுத்து அவரவர் ரசனைக்கு ஏற்றவாறு அவரவர்  நடிகைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மிக ஓபன் ஆகவும் தெளிவாகவும் நடிகை திரிஷா விளக்கி விட்டார். இதன் மூலம் நடிப்பு துறையில் நிரந்தர எதிரியும் நிரந்தர நண்பன் கிடையாது என்பதை இவர் உணர்த்தி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam