“நீங்களும் ஒல்லி பெல்லியாக மஞ்சள் டீ..!” – இப்படி வைத்து குடியுங்க..!

இன்று இருக்கும் இளைய தலைமுறைக்கு தொப்பை என்பது ஒரு மிகப்பெரிய விஷயமாக உருவெடுத்து உள்ளது. சின்ன குழந்தைகளுக்கும் ஓவர் வெயிட் காரணமாக குட்டியூண்டு தொப்பை தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து இவர்களின் வருங்காலத்தை நினைத்து அனைவரும் ஏங்கி தவிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அந்தக் குழந்தைகள் உடற்பயிற்சி, டயட் எதையும் ஃபாலோ செய்யாமல் அவர்களின் தொப்பையை குறைக்க உதவக்கூடிய மஞ்சள் டீ ரெசிபி பற்றி எந்த பதிவில் நீங்கள் படித்து அதை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதின் மூலம் ஒன்லி பெல்லியான உடல் வாக்கை பெற முடியும்.

மஞ்சள் டீ ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்

1.மஞ்சள் பொடி 5 டீஸ்பூன்

2.பட்டை பொடி இரண்டு டீஸ்பூன்

3.சுக்கு பொடி இரண்டு டீஸ்பூன்

4.மிளகு பொடி இரண்டு டீஸ்பூன்

செய்முறை

மேற்கூறிய மஞ்சள் பொடி, பட்டை, சுக்கு, மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும் பொடித்த இந்த பொருளை காற்று புகாத ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து நீங்கள் மஞ்சள் டீயை செய்ய ஒரு கப் டம்ளரில் அரை டீஸ்பூன் அளவு இந்த மஞ்சள் டீ கலவை சேர்த்து கொதிக்கின்ற நீரையும் சேர்த்து 10 நிமிடங்கள் சூடு செய்ய வேண்டும்.

பிறகு அடுப்பினை ஆப் செய்து விட்டு இள சூட்டில் நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளும் பருகலாம். அல்லது காலை நேரத்தில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதோடு உங்கள் பெல்லியும் எளிதில் குறையும். இந்த டீயை நீங்கள் குடித்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து உங்கள் காலை உணவை உட்கொள்ளுங்கள்.

இப்படி நீங்கள் 48 நாட்கள் தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் தொப்பை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் இந்த டீயை பருகுவதற்கு முன்பு உங்கள் எடையை போட்டுவிட்டு அதன் பிறகு டீயை பருகத் துவங்கிய பின்பு 48 நாட்கள் கழித்து ஒரு முறை எடை போட்டுப் பார்த்தால் வித்தியாசம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

நீங்களும் இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் மாற்றம் உங்களுக்கு நன்றாக தெரியும்.அப்படி மாற்றங்கள் ஏற்படும் போது நீங்கள் உங்களுடைய கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …