அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் பல்கி பெருகி வருவதோடு இணையங்களில் தினம், தினம் புது, புது வகைகளில் வெளி வந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வகையில் தற்போது தொகுப்பாளினி ஒருவருக்கு தீர்த்தம் கொடுத்து பாலியல் ரீதியில் துன்பத்தைத் தந்த சாமியார் பற்றிய செய்தி வேகமாக காட்டு தீ போல் இணையத்தில் பரவி வருகிறது.
பூசாரியின் வேலை..
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் தொகுப்பாளினி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
மேலும் 30 வயதே ஆகும் இந்தப் பெண் இன்ஜினியரிங் முடித்து விட்டு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றுகிறார்.
தொகுப்பாளினியாக இவர் பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் சில படங்களில் துணை நடிகையாகவும் சில கேரக்டர் ரோல்களையும் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் இவருக்கு பூசாரி ஒருவருடன் நட்பு ஏற்பட அந்த நட்பின் அடிப்படையில் இருவரும் whatsapp மூலம் ஷேர் செய்து வந்திருக்கிறார்கள். அது கூடவே போனிலும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.
அந்த வகையில் அந்த பூசாரி அந்த நடிகையை மயக்கக்கூடிய வகையில் பல பொருட்களை வாங்கி கொடுத்து அவரை தன் வலையில் வீழ்த்தி இருக்கிறார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தொகுப்பாளினி தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்த இவர் அம்மன் தீர்த்தம் என்று தண்ணீரை கொடுத்து அந்தப் பெண்ணை மயக்க நிலையில் சீரழித்து இருக்கிறார்.
கர்ப்பமான தொகுப்பாளினி..
தீர்த்தத்தை குடித்து மயங்கிய தொகுப்பாளினியை பலாத்காரம் செய்து அந்த நடிகையை அந்த இடத்தில் அப்படியே போட்டு விட்டு தப்பி இருக்கிறார். தொகுப்பாளினி மயக்கம் களைந்து பார்க்கும் போது தான் என்ன நடந்தது என்பது அவருக்கு புரிந்தது.
இதனை அடுத்து அந்த பூசாரிக்கு போன் செய்த தொகுப்பாளினி இது பற்றி கேட்கும் போது தன் அழகில் மயங்கி அப்படி செய்து விட்டேன் என கூறிவிட்டதாகவும் இதனை அடுத்து கவலைப்பட வேண்டாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
வெடித்த சர்ச்சை..
இதனை நம்பிய அந்த தொகுப்பாளினி தான் கர்ப்பம் ஆன பிறகும் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த அந்த பூசாரி கார்த்திக் தன்னை கழட்டி விட முயற்சி செய்த நிலையில் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இது போல பல பெண்களை மோசடி செய்து வரும் நபர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க போலீசார் தரப்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறார்கள் என்பதை இனி வரக்கூடிய நாட்களில் தெரிய வரும்.
மேலும் இந்த வழக்கு விசாரணை குறித்து தற்போது போலீசார் அதிதீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இருந்த விவகாரம் தான் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
இதனை அடுத்து இந்த விவகாரமான விஷயம் குறித்து அறிந்தவர்கள் விஷயம் அறியாத நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.