“உங்க வீட்டு டிவியை பராமரிக்க எளிய டிப்ஸ்..!” – ஃபாலோ பண்ணுங்க புதுசா டிவிய மாத்துங்க..!

பெரும்பாலான வீடுகளில் இன்று பெரிய திரையில் டிவிகள் உள்ளது எந்த டிவியை இவர்கள் எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றிய சில டிப்ஸ்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

தொலைக்காட்சி பெட்டியை சுத்தம் செய்வதற்கான டிப்ஸ்

நீங்கள் உங்கள் தொலைக்காட்சி பெட்டியை சுத்தப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் தொலைக்காட்சி பெட்டிக்கு செல்லும் மேல் இணைப்பை துண்டு செய்து விட்டு அதன் பிறகு உங்கள் தொலைக்காட்சி பெட்டியை துடைக்க வேண்டும்.

நீண்ட மாதங்களாக உங்கள் தொலைக்காட்சி பெட்டியை துடைக்காமல் அப்படியே தூசி அடுக்கோடு வைத்திருக்கும் போது ஸ்கிரீனில் வீண் கீறல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது இதை தடுப்பதற்காக நீங்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் தொலைக்காட்சி பெட்டியை துடைக்க வேண்டும்.

டிவியை ஆஃப் செய்துள்ள நிலையில் அந்த திரையானது கருப்பாக தெரியும்போது அதில் தூசிகள் இருப்பது மிக நன்றாக தெரியும் அந்த சமயத்தில் மின் இணைப்பை நீங்கள் துண்டித்து விட்டு துடைத்து விடலாம்.

அவ்வாறு துடைக்கும் போது நீங்கள் துடைக்க கூடிய பொருளில் அமோனியா, ஆல்கஹால் போன்ற பொருட்கள் கலந்து இருக்கும் வேதி கலவைகளை கொண்டு துடைக்க கூடாது.

எந்த ஸ்பிரேயரை பயன்படுத்தி நீங்கள் சுத்தப்படுத்த நினைத்தாலும் அந்த ஸ்ப்ரேயரில் உள்ள லிக்விடும் சில துளி நீரை கலந்து மென்மையான துணியால் துடைத்து பிறகு வர துணியால் துடைத்து விடுங்கள்.

தற்போது புழக்கத்தில் இருக்கும் எல்சிடி பிளாஸ்மா போன்ற திரைகளை துடைப்பதற்கு நீங்கள் மைக்ரோ பைபர் துணிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது இல்லை என்றால் உங்கள் கையில் இருக்கும் ரேகைகள் அந்த திரையில் பதிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

திரையை சுத்தம் செய்த பிறகு உடனே டிவியை ஆன் செய்ய வேண்டாம் சில மணி நேரங்கள் கழித்து ஆன் செய்தல் மிகவும் சிறப்பானது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

மேற்கூறிய டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்து உங்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியை மாதத்தில் இரண்டு முறை சுத்தம் செய்வதின் மூலம் உங்கள் தொலைக்காட்சி பெட்டியின் ஆயுள் அதிகமாவதோடு புதிய தொலைக்காட்சி பெட்டியை போல் அதை காட்சியளிக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …