TVKனா இது தான் அர்த்தமா..? வெளியான தகவல்..! பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லக் கூடிய வகையில் தினம் தினம் புது, புது கட்சிகள் மக்களுக்காக என்ற பெயரில் உதயம் ஆகி வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் தமிழ் திரைப்பட நடிகர் தளபதி விஜய் TVK எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். இந்த மூன்றெழுத்தின் விரிவாக்கம் தமிழக வெற்றி கழகம் என்பதாகும்.

 

மேலும் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய நடிகர்கள் கட்சிகளை ஆரம்பித்து அரசியல்வாதிகளாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதோடு மட்டுமல்லாமல் தமிழக முதலமைச்சர் நாற்காலியை பிடிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

TVK-னா இது தான் அர்த்தமா..?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் ஆரம்ப காலத்தில் சில திரைப்படங்களில் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் அதனை அடுத்து நடித்த படங்களில் மக்கள் மனதை கவரக்கூடிய வசனங்களை பேசி ஆரம்ப காலத்தில் இருந்தே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது TVK கட்சியை ஆரம்பித்து விட்டார்.

அடுத்து இந்த கட்சியை பலப்படுத்துவதற்காக உறுப்பினர்களை கேட்கக்கூடிய பணி தீவிரமாக அண்மை காலங்களில் நடந்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கலாம்.

மேலும் தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த இரண்டு படங்கள் முடிந்த பிறகு திரை உலகில் இருந்து வெளி வந்து முழுநேர அரசியலில் களம் இறங்கப் போகும் தளபதி விஜய் அதற்கான முன்னோட்டங்களை செய்து அசத்தி வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய உயிர் பலியை அடுத்து ஆளும் கட்சிக்கு சவால் விடக் கூடிய வகையில் தனது பதிவினை பகிர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

வெளியான தகவல்..

அது மட்டுமில்லாமல் எம்ஜிஆர், என் டி ஆர், ஜெயலலிதா போன்ற நடிகர், நடிகைகளை போல இவரும் விரைவில் தமிழக சிம்மாசனத்தை பிடிக்கக்கூடிய வகையில் இவரது செயல்பாடுகளும் அணுகு முறைகளும் உள்ளதாக சொல்லி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் கேப்டன் விஜயகாந்த் க்கு பிறகு அவர் இடத்தை இவர் நிரப்பி விடுவார் என்ற ரீதியில் ரசிகர்கள் அனைவரும் வா தலைவா வா என்ற வாசகங்களோடு வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தியேட்டர் ஸ்டாராக இருக்கக் கூடிய தளபதி விஜய் திரையுலகை விட்டு வெளியேறி விட்டால் தியேட்டர்களில் வசூல் குறைந்துவிடும் என்று ஒரு பக்கம் பேசப்பட்டு வந்தாலும் அரசியலுக்கு வந்தால் இவரால் நன்மை நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

மக்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் தளபதி விஜய் செயல்படுவாரா? இல்லை அரசியலில் சோடை போவாரா? என்பது வருங்காலத்தில் நடக்கும் தேர்தல்கள் இவரது நிலைமையை நிரூபிக்கும்.

இதனை அடுத்து நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் முதல் மாநாட்டிலேயே நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இருக்கிறார்கள்.

அதனை தொடர்ந்து அவர்களுக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட இருக்கிறது என்ற தகவல்கள் இணைய பக்கங்களில் கிசு கிசுவாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இது குறித்து எந்த வித அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் கூட ரசிகர்கள் பலரும் இதனை கலாய்க்கும் விதமாக மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

அப்படின..? TVK என்றால் தமிழக வெற்றிக்கழகம் இல்லையா..? திரிஷா விஜய் கீர்த்தி சுரேஷ் என்பது தானா..? என்று பங்கம் செய்து வருகின்றனர்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version