ஆன்மீக வழிபாட்டில் விளக்குகளின் முக்கியத்துவம் இன்றியமையாதது. விளக்குகள் இல்லாமல் எந்த ஒரு வழிபாடும் பூர்த்தி ஆவது இல்லை. இந்துக்களின் வழிபாட்டில் இந்த விளக்குக்கு என்று ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த விளக்குகளை ஏற்றி வழிபடுவதன் மூலம் தான் இறைவனின் அருளை மிக விரைவில் பெறுவதோடு நமது கர்ம வினைகளும் நீங்குகிறது என்று சாஸ்திரங்களில் கூறியிருக்கிறார்கள்.
பொதுவாக விளக்கு ஏற்ற உகந்த நேரமாக நாம் கருதுவது பிரம்ம முகூர்த்தமான 4 மணி முதல் 6:00 மணி வரையும் மாலை நேரமெனில் அது ஆறு மணி முதல் 7 மணி வரையும் என சாஸ்திரங்கள் கூறி இருக்கிறது.
இந்த நேரத்தில் நாம் விளக்கினை ஏற்றி வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகள் மட்டுமல்லாமல் நமக்கு புண்ணியமும் ஏற்படுமாம்.
செய்த பாவத்தை நீக்கக்கூடிய சக்தி பிரதோஷ வேளைக்கு உள்ளது. இந்த பிரதோஷ வேளையில் 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் மாலை நேரத்தில் சிவபெருமானுக்கும் நரசிம்ம மூர்த்திக்கும் உகந்த நேரம் என்பதால் அந்த நேரத்தில் திருமணம் ஆகாதவர்கள் தீபம் ஏற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் தடை , கல்வித்தடை நீங்கும்.
விளக்குகளின் வகைகள் மற்றும் பயன்கள்
1.மண்ணால் செய்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் பீடை விலகும்.
2.வெள்ளியால் செய்த விளக்கை ஏற்றி வழிபட்டால் திருமகள் அருள் கட்டாயம் வீட்டில் கிடைக்கும்.
3.பஞ்ச உலோகங்களால் ஆன விளக்கில் தீபம் ஏற்றி வழிபடும்போது தேவதைகள் வாசம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகும்.
4.வெண்கலத்தால் செய்த விளக்கில் தீபம் ஏற்றி வழிபட ஆரோக்கியம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மேம்படும்.
5.இரும்பு விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் நீங்கும்.
தீபத்தில் ஊற்றும் எண்ணெய்களுக்கான பலன்கள்
💐 பசு நெய்யில் தீபம் ஏற்றினால் மோட்சம் கிடைக்கும் பாவங்கள் தீரும்.
💐 விளக்கு எண்ணையில் தீபம் ஏற்றினால் குடும்பத்தில் சுகம் ஏற்பட்டு சகல சௌபாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும். 💐இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வ அருள் முழுமையாக கிடைப்பதோடு முன்னோர் சாபங்கள் முற்பிறவி பாவங்கள் நீங்கும்.
💐நல்லெண்ணெய் தீபத்தால் கடன்கள் அடியோடு அழிந்து போகும் அதுமட்டுமல்லாமல் உடலில் ஏற்படும் நோய்கள் தீரும்.
💐 தேங்காய் எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றினால் திருமண தடை அறவே நீங்கும்.
முக்கூட்டு எண்ணெய்களைக் கொண்டு வழிபடுவது மேலும் சிறப்பை தரும் எந்த முக்கூட்டி எண்ணெயில் பசு நெய் விளக்கு, எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகியவற்றில் சம அளவு கலந்து ஊற்றி வருவதன் மூலம் உங்களது கோரிக்கைகளை இறைவன் எளிதில் பரிசீலித்து நன்மை அளிப்பார்.