இயக்குனரை காதலித்த உதயநிதி ஸ்டாலின்..! மனைவி கிருத்திகா போட்ட தடாலடி கண்டிஷன்..!

வாரிசு அரசியல் மற்றும் வாரிசு சினிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மிகப்பெரிய நட்சத்திரமாகவும் அரசியல் பிரபலமாகவும் இருந்து வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின் .

இவர் தற்போது தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சராகவும் ரெட் ஜெயின்ட் நிறுவனத்தின் பொறுப்பாளரும் ஆக இருந்து வருகிறார்.

 

உதயநிதி ஸ்டாலின்:

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பல்வேறு அரசியல் நலத்திட்ட பணிகளை செய்து வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாபெரும் ஹீட்டடித்த திரைப்படம் தான் மாமன்னன்.

இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பும் அவரது ரோலும் மிக அழுத்தமானதாக இருந்தால் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது .

அது மட்டும் இல்லாமல் வசூலிலும் நல்ல கலெக்சன்ஸ் ஈட்டி இந்த திரைப்படம் நல்ல லாபத்தை பெற்ற படமாக பார்க்கப்பட்டது.

கடைசியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததோடு உதயநிதி சினிமாவில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்தே விலகிவிட்டார்.

கணவரின் தொழிலை கையில் எடுத்த கிருத்திகா:

அவருக்கு பதிலாக மனைவி கிருத்திகா ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்று நடத்தி வருகிறார்.

கணவர் அரசியலில் பிஸியானதை தொடர்ந்து. மனைவி கிருத்திகா உதயநிதி “காதலிக்க நேரமில்லை” என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

தொடர்ந்து கிருத்திகா திரைப்படங்களை இயக்குவதில் படு பிஸியாக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இன்பந் தன்மயா என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். திருமணம் செய்து இத்தனை வருடங்கள் ஆகியும் புதுமன ஜோடிகள் போல பார்க்கப்பட்டு வருகிறார்கள் கிருத்திகா மற்றும் உதயநிதி ஜோடி.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் உதயநிதி மற்றும் கிருத்திகா இருவரும் சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு அதில் பல விஷயங்களைப் பற்றி பகிர்ந்துக்கொண்டார்கள்.

உதயநிதி காதலை நிராகரித்த கிருத்திகா:

தங்களது காதல் அனுபவம், திருமணம், அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டார்கள். அப்போது பேசிய கிருத்திகா உதயநிதி…என் கணவர் உதய் என்னிடம் வந்து காதல் ப்ரொபோஸ் பண்ணும் போது நான் ஆரம்பத்தில் ஏத்துக்கவே இல்ல.

காரணம் அவர் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்ததால் நான் நிராகரித்துவிட்டேன். எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம் இது சரியாகுமா குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் நமக்கு செட் ஆகுமா என்ற பல கேள்வி என்னுடைய மனதில் ஓடியது.

அதனால் அவரை முதலில் எடுத்து எடுப்பிலேயே வேண்டாம் என்று நிராகரித்தேன். அவர் அப்போது பார்க்கும்போது ஒரு நல்ல மனிதராக தெரிந்தார்.

பின்னர் அவரை தொடர்ந்து பார்க்க பார்க்க எனக்கு பிடித்து விட்டது. நானே ஒரு கட்டத்தில் இறங்கி வந்து ஓகே சொல்லிவிட்டேன் என கிருத்திகா கூறியிருந்தார் .

நான் அப்போதே… நீ அரசியலில் மட்டும் வந்து விடாதே என்று சத்தியம் எல்லாம் வாங்கினேன். அதன் பிறகு அரசியலுக்கு தானே போக கூடாதுன்னு சொன்ன… ஆனா நான் நடிக்கிறேன் ஹீரோவாக அப்படின்னு சொல்லி பர்மிஷன் வாங்கி நடிச்சாரு.

இப்ப கொஞ்சம் கொஞ்சமா அரசியல் பக்கமும் முழுசா போயிட்டாரு. என்று கிருத்திகா ரொம்ப காமெடியாக இந்த விஷயத்தை பகிர்ந்துக்கொண்டார்.

பெண் இயக்குனரை கதைத்த உதயநிதி:

இவர்களின் கலகலப்பான இந்த பேட்டி சமூக வலைதளங்கள் முழுக்க வைரல் ஆகியது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய அரசியல் வாரிசு குடும்பத்தை சேர்ந்தவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கும்போதே சாதாரண இயக்குனராக இருந்து வந்த கிருத்திகா உதயநிதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த விஷயம் அப்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும் அவரது காதலை அவரது குடும்பத்தார் ஏற்றுக்கொண்டனர்.

தற்போது கிருத்திகா மற்றும் உதயநிதி இருவரும் மிகச் சிறந்த ஜோடிகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version