“யோவ்.. அந்த ஆளே ஒரு…” ஃபகத் ஃபாசில் குறித்து உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராக இருந்ததை அடுத்து நடிகராக களம் இறங்கியவர். தற்போது இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு குருவி படத்தில் ஆரம்பித்த இவர்களது பயணம் ஆதவன், மன்மதன் அம்பு, 7 அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்து படத் தயாரிப்பாளராகவும் வினியோகிஸ்தராகவும் திகழ்ந்தார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின்..

மேலும் இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் 2012-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகம் ஆனவர்.

இதனை அடுத்து பல படங்களில் நடித்தார். தற்போது அரசியலில் கவனம் செலுத்தி இவர் கடைசியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்து நடிப்பு தொழிலுக்கு பை பை சொன்னார்.

மேலும் தீவிரமாக அரசியலில் கவனத்தை செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலின் அண்மை பேட்டி ஒன்றில் இவரது கடைசி படத்தில் நடித்த அனுபவம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜோடு இணைந்து பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் இவருடன் இணைந்து பகத் பாசில் தனது சிறப்பான அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

பகத் பாசில் குறித்து சொன்ன..

அந்த வகையில் அந்த ஷூட்டிங் சமயத்தில் நடந்த விஷயத்தை விவரமாக கூறிய ஸ்டாலின் அன்று எடுத்த ஷூட்டிங்கில் இவரும் பகத் பாசிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் அந்த காட்சி படப்பிடிக்கப்பட்ட நிலையில் இன்றாவது படப்பிடிப்பு முடியுமா என்று இவர் காத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அந்த காட்சி அன்றோடு அங்கு எடுக்கக்கூடிய நேரமும் முடிந்து விட்டதால் மீண்டும் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது.

எனினும் டைரக்டர் மாரி செல்வராஜ் இந்த காட்சிக்கு ஓகே என்று சொல்வாரா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வழியாக டேக் ஓகே என்று சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

என்னது.. அந்த ஆளு ஒரு..

அந்த சமயத்தில் பகத் பாஸில் வந்து படப்பிடிக்கப்பட்ட அந்த காட்சியை பார்த்து திருப்தி ஆகாது போல மாரி செல்வராஜிடம் வேண்டுமென்றால் நாளை பிரஷ்ஷாக டேக் செல்லலாமா? என்று கேட்க நான் சற்று கடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டேன்.

இதனை அடுத்து “யோவ்.. அந்த ஆளே ஒரு சைக்கோ அவரிடம் போய் இப்படி சொன்னா எப்படி என்பது போல நான் பேசியதை அடுத்து அனைவரும் கலகலப்பானார்கள்.

யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் இப்படிப்பட்ட கலாய்ப்பை கேட்டு அனைவரும் சிரித்தது என்று நினைத்தாலும் மறக்க முடியாத நினைவாக உள்ளது என்று உதயநிதி கூறி இருக்கிறார்.

இந்த விஷயத்தை அவர் பேசியதை அடுத்து இணையத்தில் இது பேசும் பொருளாக மாறிவிட்டதோடு ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் விஷயமாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version