கமல் படமே எனது கடைசி படமாக இருக்கும் என்று உதயநிதி பேசிய பேச்சால் ரசிகர்கள் வருத்தம்…!!

 தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள கழகத் தலைவன் திரைப்படம் வரும் நவம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரவுள்ளது.

 இந்தப் படம் ஆனது அரசியலை அடிப்படையாகக் கொண்டிருக்காது என்று ஒரு சிறப்பு பேட்டியில் உதயநிதி தெரிவித்து இருந்தார். ஏன் இந்த படத்துக்கு கலகத் தலைவன் என்ற பெயர் சூட்டப்பட்டது. மேலும் அதில் என்ன கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார் என்ற கேள்விகளுக்கு அவர் எப்படி பதில் சொல்லியிருந்தால் தெரியுமா?

 உண்மையில் கலகத் தலைவன் என்ற இந்த திரைப்படமானது அரசியல் சார்ந்த படம் அல்ல.இதில் திரு என்ற கேரக்டர் மென்பொருள் துறையில் வேலை செய்கிறார்.

 இந்தத் திரைப்படத்தை ஒப்புக்கொண்டது ஒரு மிகப்பெரிய கதை அருண் விஜய் நடித்த தடம் கதை எழுதி முடித்து அந்த கதையைத்தான் முதலில் என்கிட்ட சொன்னார்கள். பின்பு தயாரிப்பாளர் கிட்ட கதை சொல்லும் போது தயாரிப்பாளர் தடம் கதை தவிர இன்னொரு கதை உள்ளது என்று கூறினார்.

 ஆனால் என்னால் தடம் கதை செய்ய முடியாமல் போய்விட்டது படம் ரிசல்ட் பார்த்து ஐயோ மிஸ் பண்ணிட்டேன் என்று மிகவும் வருத்தப்பட்ட போது தான் மகிழ் திருமேனி என்கிட்ட கண்டிப்பாக நாம் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று  வாக்கு கொடுத்திருந்தார்.

 அது நிமித்தமாக அந்த படத்திற்கு தலைப்பு ஏதும் வைக்கவில்லை பிறகு என் அப்பாவிடம் அனுமதி வாங்கி இந்த தலைப்பை வைத்தோம். இந்த படத்தில் காமெடி எதுவும் வேண்டாம். ஒரு சீரியஸான படம் பண்ண வேண்டும் என்று தான் நான் ஆரம்பத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை தேர்ந்தெடுத்து நடித்தேன்.

இதனை அடுத்து நாம் நடிக்கக்கூடிய கடைசி படமாக தான் இது இருக்கணும் என்ற எண்ணத்தில் தான் மாமன்னன் படம் கதை முடிவு பண்ணினேன்.

பின் கமல் தயாரிக்க கூடிய படமும் பண்ணுகிறேன். இதை அடுத்து கமல் தயாரிக்கும் படத்தோட கதை இன்னும் நான் கேட்க வேண்டியது இருக்கு. அத்தோடு என்னுடைய சினிமா கேரியர் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.

 மேலும் தற்போது அதிக கவனம் செலுத்தி தான் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறேன் திரைக்கதையில் அதிக ஆர்வத்தை காட்டி நான் நடித்து சூட்டிங் முடித்துவிட்டு பிறகு அரசியல் வேலைகளை செய்து வருகிறேன். எனவே அரசியல் மற்றும் சினிமாவை பேலன்ஸ் பண்ணி செய்யக்கூடிய காரியம் கடினமாகத்தான் இருக்கிறது.

 எனினும் இனி முழு நேர அரசியலில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன் இந்த கலக தலைவன் படத்தில் எனக்கு கெட்டப் இரண்டு உள்ளது. எனவே கொஞ்சம் சிரமம் எடுத்து தான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.

 தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கக்கூடிய நீங்கள் ஏன் அதை விட்டு விலகப் போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நான் என்ன தமிழ் சினிமாவை காப்பாற்றவு போறேன். வேலை இல்லாமல் ஜாலியாக சுற்று இருந்ததால் நிறைய படங்களை தயாரித்தேன்.

 இப்போது எனக்கு பொறுப்பு அதிகரித்து விட்டது. எனவே சினிமாவில் ஒரு படம் கிடைத்தால் மூன்று மாத காலம் போய்விடுகிறது வெளியூர் படப்பிடிப்பு போனால் என்னால் அரசியலில் ஈடுபட முடியாது.

 எனவே அரசியலை தான் நான் மிகவும் முக்கியமாக நினைப்பதோடு அதிக கவனமும் தற்போது செலுத்த வேண்டி இருப்பதால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …