விஜய்க்கும் எனக்கும் சண்டை வர காரணம் இது தான்.. பகீர் கிளப்பிய உதயநிதி ஸ்டாலின்..

தமிழ் திரையுலகில் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கும் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக திகழ்கிறார். இதனை அடுத்து தற்போது இவர் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்..

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் கடைசியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார். ரெட் ஜெயன்ட் மூவி இன் சொந்தக்காரராக திகழக்கூடிய இவர் தமிழக முதல்வரின் மகனாக விளங்குகிறார்.

இவரது தயாரிப்பில் வெளி வந்த திரைப்படம் தான் விஜய், திரிஷா இணைந்து நடித்த குருவி எனும் திரைப்படம். ஆரம்பத்தில் கே எ ரவிக்குமாரின் ஆதவன் திரைப்படத்தில் 2009 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர் 2012 ஆம் ஆண்டு ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

இதையும் படிங்க:

இதனை அடுத்து பல படங்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் நெஞ்சுக்கு நீதி என்ற இவர் நடித்த படம் தான் இவரை கவர்ந்த படமாக கூறி இருக்கிறார்.

தளபதியோடு நட்பு..

அது போலவே தளபதி விஜய் பற்றி அதிக அளவு யாரும் கூற வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக செயல்பட்டு வரும் இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனியாக கட்சியினை ஆரம்பித்து அரசியலில் களம் இறங்கப் போகிறார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலினுக்கும் தளபதி விஜய்க்கும் இடையே இருக்கக்கூடிய நட்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் தளபதி விஜய் யாருடனும் நெருக்கமாக பழக மாட்டார். அப்படி பழகினால் அவரை விட்டு உடனே விலக மாட்டார் என்ற உண்மையை உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

அத்தோடு இவர்களுக்கு இடையே ஒரு நல்ல நட்பு இருந்ததாகவும், ஆனால் இடையில் நடந்த சில விஷயங்களால் அவர்கள் தொடர்ந்து பேச முடியவில்லை என்ற அரசின் தகவலை வெளியிட்டிருந்தார்.

இடையில் நடந்த கசமுசா..

இதற்கு காரணம் இவர்களுக்குள் நடந்த ஒரு விஷயத்தை மிகைப்படுத்தி விஜயிடம் உதயநிதி பற்றி தவறான விஷயங்களை சில கூறி விட்டார்கள். இந்த காரணத்தால் தான் விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் இருவர் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது.

இதையும் படிங்க:

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் விஜயை உதயநிதி நேரடியாக சந்தித்து நடந்த விஷயங்கள் பற்றி விளக்கி இருப்பதோடு யாரோ உங்களிடம் என்னை பற்றி தவறாக கூறி விட்டார்கள். நீங்கள் என்னை பற்றி தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்ததோடு இதனை அடுத்து விஜய் சமாதானம் ஆகிவிட்டார் என்பதையும் பகிர்ந்தார்.

எனவே ஒரு காலத்தில் நாங்கள் இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக இருந்தோம். ஆனால் இப்போது இல்லை. தேர்தலுக்கு முன்பு அவர்களது வீட்டுக்குச் சென்று நான் சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால் தேர்தலுக்குப் பிறகு அவருடன் இருந்த அந்த நெருங்கிய தொடர்பு தற்போது இல்லை என்று உதயநிதி கூறிய விஷயம் இதயத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் சண்டை வர இது தான் காரணமா? என்ற ரீதியில் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version