நடிகர் விஜய் கடந்த 2ம் தேதி திடீரென தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக அவர் பேசப்பட்டார். இப்போதைக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் டாப் லெவல் நடிகராகவும் விஜய் இருந்து வருகிறார்.
அவரது அரசியல் வருகை யாரை பாதித்ததோ இல்லையோ, தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுவும் நாடாளுமன்ற தேர்தல் எங்கள் இலக்கு அல்ல. அதில் போட்டியிடவும் இல்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை என்பதை தெரிவித்த விஜய், 2026 சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு என்ற குண்டை தூக்கிப் போட்டார்.
தமிழக வெற்றி கழகம்..
தனது கட்சி பெயர் தமிழக வெற்றி கழகம் என்றும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் இருந்துவரும் பட்சத்தில் அவர்களது வழக்கப்படி ஸ்டாலினுக்கு பிறகு, முதல்வர் இருக்கை உதயநிதி ஸ்டாலினுக்குதான்.
அதனால் கட்சியினர் அவரை வருங்கால முதல்வரே என்று பேனர் வைத்தும், நேரில் வாழ்த்தியும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென அந்த முதல்வர் நாற்காலியை குறிவைத்து நடிகர் விஜய் இப்போது டிவிகே கட்சி தலைவராக அரசியலுக்கு வந்திருப்பது உதயநிதி ஸ்டாலினுக்கும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.
உதயநிதி ட்வீட்..
நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்த நிலையில், தற்போது அமைச்சராக இருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்
ஒரு டிவீட் செய்துள்ளார்.
அதாவது, கடந்த 2011 -ம் ஆண்டு, அக்டோபர் 30ம் தேதி விஜய் குறித்து அவர் பதிவு செய்த டிவீட் ஒன்று இணையத்தில் இப்போது வைரல் ஆகி வருகிறது.
அதில் காமெடி பண்ணாதீங்க ப்ரோ, விஜய்ணா கூட போய் போட்டி போட நான் என்ன லூசா என்று அதில் கேட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
என்ன கேள்விக்கு இப்படி பதில் அளித்தார் என்று தெரியவில்லை. ஆனால் இவருடைய பதில் இணையத்தில் இப்படி இருக்கிறது.
ஆனால் என்ன கேள்வி என்று தெரியாத காரணத்தினால் ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர்.
ஒரு வேளை நடிகர் விஜயின் திரைப்படத்துடன் தன்னுடைய படத்தை போட்டிக்கு ரிலீஸ் செய்வீர்களா..? என்ற கேள்விக்கு, உதயநிதி இப்படி பதில் கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள்.
விஜயுடன் போட்டி போட நான் என்ன லூசா, என்ற உதயநிதி ஸ்டாலினின் இந்த எக்ஸ் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.